உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டெங்கு காய்ச்சலுக்கு 4,384 பேர் பாதிப்பு

டெங்கு காய்ச்சலுக்கு 4,384 பேர் பாதிப்பு

சென்னை:தமிழகத்தில் இந்தாண்டில் டெங்கு காய்ச்சலால், 4,384 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதன் பரவல் அதிகரித்து உள்ளது.தென்மேற்கு பருவமழை காரணமாக, 'ஏடிஸ் - எஜிப்டை' வகை கொசுக்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு பரவலாக இருக்கிறது.இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் தினமும் குறைந்தது, 10 பேர் வரை டெங்கு பாதிப்பால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இந்தாண்டில் இதுவரை, 4,384 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிர்இழப்பு இல்லை.டெங்குவை போல, சிக்குன் குனியா, மலேரியா, ஜிகா போன்ற நோய்கள் தடுப்பிலும் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போது வரை, டெங்கு பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை