உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோட்டாவுக்கு 4.67 லட்சம் ஓட்டு

நோட்டாவுக்கு 4.67 லட்சம் ஓட்டு

சென்னை:தேர்தலில் எந்த வேட்பாளருக்கும், ஓட்டளிக்க விரும்பாதவர்கள், 'நோட்டா'வுக்கு ஓட்ட களிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும், லட்சக்கணக்கானோர் நோட்டாவுக்கு ஓட்டளித்து வருகின்றனர்.அந்த வகையில், இந்த தேர்தலில், 4 லட்சத்து 67 ஆயிரத்து 68 பேர், நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 1.28 சதவீதம் பேர், நோட்டாவுக்கு ஓட்டளித்திருந்தனர். இம்முறை 1.07 சதவீதம் பேர் மட்டும் ஓட்டளித்து உள்ளனர்.விருதுநகர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தனக்கு அடுத்தபடியாக வந்த தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை விட, 4,379 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அத்தொகுதியில், 9,408 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்து உள்ளனர்.ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில், அதிகபட்சமாக, 26,450 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர். மிகவும் குறைந்தபட்சமாக, கன்னியாகுமரியில் 3,756 பேர் நோட்டாவுக்கு ஓட்டளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை