உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 500 மின்சார பஸ்கள் சென்னையில் விரைவில் ஓடும்

500 மின்சார பஸ்கள் சென்னையில் விரைவில் ஓடும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'அரசு போக்குவரத்து கழகங்களில், இந்த நிதி ஆண்டிற்குள், 7,030 புதிய பஸ்கள் இயக்கப்படும்' என, தமிழக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.இது குறித்து தமிழக போக்குவரத்து துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கொரோனா காலமான, 2020 - -21 மற்றும் 2021 -- 22 கால கட்டங்களில், போக்குவரத்து கழகங்கள் எந்த வருமானமும் இல்லாமல் நிதி நெருக்கடியில் இருந்ததால், புதிய பஸ்கள் வாங்க இயலவில்லை. இதன் காரணமாக, பழைய பஸ்களின் எண்ணிக்கை அதிகமானது. 2023 டிசம்பர் நிலவரப்படி, பஸ்களின் சராசரி வயது 9.13 ஆண்டாகவும், பழைய பஸ்களின் எண்ணிக்கை 10,582 ஆகவும் அதாவது, 52.73 சதவீதமாகவும் இருந்தது.கடந்த 2022 -- 23ல் 1,000; 2023 -- 24ல் 1,000; 2024 -- 25ல் 3,000; கே.எப்.டபிள்யு., ஜெர்மனி வளர்ச்சி வங்கி உதவியுடன், 2,666 பஸ்கள் உட்பட 7,682 புதிய பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இதுவரை 652 புதிய பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 7,030 பஸ்களும் இந்த நிதி ஆண்டுக்குள் இயக்கப்பட்டு, அதே எண்ணிக்கையில் பழைய பஸ்கள் கழிக்கப்படும்.மேலும், மொத்த செலவு ஒப்பந்த அடிப்படையில் சென்னையில் 1,000 மின்சார பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக, 500 மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

krishnan
மே 04, 2024 16:36

தனியார் corporate கம்பெனிகளிடம் oppadayunga


மாதவன்
மே 04, 2024 08:12

எத்தனை முன்னேறினாலும் ஜெர்மனி கிட்டே கேட்டு பொழப்பை நடத்துங்க.


அப்புசாமி
மே 04, 2024 08:11

உடனடியா பஸ் வாங்கி ஆட்டை. இந்த பஸ்களும் ரெண்டே வர்ஷத்தில் கழண்டு வந்துரும். நம்ம டெக்னாலஜி அப்படி.


ஆரூர் ரங்
மே 04, 2024 07:39

அடுத்த ஸ்டிக்கர். இது முழுக்க முழுக்க மத்திய நிதி மற்றும் திட்டத்தில் செயல்படுத்தப்படுவதே


Kasimani Baskaran
மே 04, 2024 07:08

சராசரி கணக்கு மூலம் கண்டம் செய்யும் அளவிலும் ஓடும் பேருந்துகளின் எண்ணிக்கையை சொல்லவே மாட்டார்கள் அது மட்டுமல்ல ஒவ்வொரு பேருந்துக்கும் பராமரிப்புக்கு செய்யும் செலவையும் சொல்ல மாட்டார்கள் ஆக இது ஒரு டெக்னிக்கலாக ஏமாற்றும் முறை


D.Ambujavalli
மே 04, 2024 06:42

கண்டக்டர் சீட்டோடு தெருவில் வீசப்படுவதும், படிக்கட்டுகளே உடைந்து விழுவதுமாக உள்ள 'காயலான் கடை' பேருந்துகளுக்கு தகுதிச்சான்று கொடுக்கும் போva அதிகாரிகள் உள்ள வரை பழையவற்றை வைத்தே 'ஓட்டி ' விடுவார்கள்


GMM
மே 04, 2024 06:25

ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் மின்சார பஸ் இதனை பராமரிக்க புதியவர் தேவை யார் உதவியுடன் மின் சார்ஜ் நிலையம்? போட்ட முதல் திரும்ப பெற திட்டம் இல்லை என்றால், இது தமிழக வீழ்ச்சி திட்டம் இதில் இலவசம் உண்டா? எங்கும் எப்போதும் கடன்? இனி பிற கட்சிகள் ஆட்சி செய்ய முடியாத அளவுக்கு கடன்? திராவிட மாயை மாடல்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி