மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
34 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
34 minutes ago
சென்னை : ''தமிழகத்தில், 8.37 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்,'' என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி: தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு, நமது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் வழங்கப்படுமா? புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த கொள்கை உருவாக்கப்படுமா?அமைச்சர் கணேசன்: தமிழக தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவிகள், அவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் இம்மாதம் 20ம் தேதி வரை, 2,280 வெளிமாநில தொழிலாளர்கள், வாரியத்தில் பதிவு செய்துள்ளனர்.வெளிமாநில தொழிலாளர் இறந்தால், அவரது உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல, அதிக பட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வெளிமாநிலத்தில் இருந்து வந்து, இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர் நல அலுவலகங்களில், வேலை அளிப்போர் வழியாக, எட்டு லட்சத்து 37,540 பேர் பதிவு செய்துள்ளனர்.இவ்வாறு விவாதம் நடந்தது.
34 minutes ago
34 minutes ago