உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீங்களா; கேரளாவில் இருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக்கழிவுடன் வந்த லாரி பறிமுதல்!

எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீங்களா; கேரளாவில் இருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக்கழிவுடன் வந்த லாரி பறிமுதல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி சி.சி., டி.வி., காட்சிகள் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். நாகர்கோவில் வழியாக வரும் மூட்டைகளை திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், பணகுடி, நாங்குநேரி வட்டாரங்களில் கொட்டினர்.தென்காசி வழியே வரும் லாரிகளில் மருத்துவக் கழிவுகளை கடையம், ஆலங்குளம் வட்டாரங்களில் கொட்டினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tr67j5ie&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருநெல்வேலி சீதபற்பநல்லூர் அருகே நடுக்கல்லூர், பழவூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களில் ககேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் எச்சரித்து இருந்தார்.கடந்த டிசம்பர் 19ம் தேதி, திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்' என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனால் கேரளாவில் இருந்து மருத்துவக்கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டப்படும் சம்பவம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், இன்று (டிச.,21) கேரளாவிலிருந்து திருநெல்வேலிக்கு மருத்துவக் கழிவுகள் கொண்டுவந்த லாரி சி.சி., டி.வி., காட்சிகள் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டது. சேலத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர், டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Pathmanaban
டிச 22, 2024 13:49

4லாரிய பெட்ரோல் ஊற்றி எரிச்சா திருந்துவாங்க


Svs Yaadum oore
டிச 22, 2024 11:59

கனிம சுரங்கச் சட்டத்தை ஆதரித்த அ.திமு.க.,வுக்கு கண்டனம் ,டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனமாம் .....விடியல் கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ...கேரளாவில் இருந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் லாரி லாரியாக இறைச்சி கழிவுகள், மருத்துவக் கழிவுகள் குப்பைகளை மூட்டைகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர். ....இருபது வருடத்திற்கு மேல் இது நடக்குது ...இது செய்வது மொத்தமும் இங்குள்ள கழக கும்பல்கள் ....இதை படுத்து நிறுத்த விடியலுக்கு வக்கில்லை ...இவனுங்க என்னமோ யோக்கியன் மாதிரி மத்திய அரசுக்கு கண்டனமாம் ....


நிக்கோல்தாம்சன்
டிச 22, 2024 07:28

லாரி ஓனரின் மாநில முதல்வர் மீதும், கழிவுகளின் மாநில முதல்வர் மீதும் கோர்ட் தானாக முன்வந்து கேஸ் பதியும் நாளில் இந்த குப்பைகள் கழிவுகள் இடமாற்றம் நின்றுவிடும்


Bala
டிச 21, 2024 21:49

சிறுபான்மையினரான கிறித்துவர்கள் அதிகம் வாழும் பகுதியில்தான் இந்த கழிவுகள் கொட்டப்படுகிறதாக கூறப்படுகிறது. விடியல் மாடல் அரசு கேரளாவிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு இவர்களையெல்லாம் அனுமதிக்கிறது என்ற சந்தேகம் என் கிறித்துவ நண்பர்களிடையே வர ஆரம்பித்திருக்கிறது. 2026 தேர்தலில் கிறித்துவர்கள் ஜோசப் விஜய்க்கு ஓட்டுபோடுவார்கள் என்று கூறினார்கள்


Ram pollachi
டிச 21, 2024 18:42

தமிழக லாரிகளுக்கு கேரளா செல்ல பர்மிட்டை தற்காலிகமாக தடை செய்யலாம் அல்லது அனைத்து எல்லை பகுதியை மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


என்றும் இந்தியன்
டிச 21, 2024 17:51

இது தான் பலப்பல பலப்பல வருடங்களாக நடைபெறுகின்றது???யாருடைய தயவில்???பணம் பணம் பணம் கொடு என்ன வேண்டுமானாலும் ரெடி திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசு இருக்கும் வரை இதெல்லாம் சகஜமப்பா???/


வாசகர்
டிச 21, 2024 17:42

தமிழர்கள் தான் உலகிலேயே சிறந்தவர்கள் ஒரு கூட்டம் உசுப்பேத்தி கொண்டே இருக்கும். கேரளாக்காரன் நம்ம கனிமவளத்தை எடுத்துகிட்டு குப்பையை பரிசா தருகிறான், இதையே மாத்தி ஒரு கேரளாக்காரன் பன்னுவாரா? இந்த உலகிலேயே காசுக்காக தன் தலையில் தானே மண்ணை வாரி கொட்டிகொள்ளுபவர்கள் தான் இப்படிப்பட்ட இழி காரியத்தை செய்வார்கள். பக்கத்து வீடு நல்லா இருந்தா தான் நாம நல்லாயிருக்க முடியும் என்பதை எப்ப கேரளா உணருமோ?


sri
டிச 21, 2024 17:38

தமிழகம் கேரளா நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு தெரியும். கேரளாவில் தவறு செய்தால் ஹெவி அபராதம். கட்டத்தவறினால் வண்டி சீஸ் செய்வார்கள். எவரும் லஞ்சம் வாங்க மாட்டார்கள். தமிழகத்தில் லஞ்சம் கொடுத்து எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்...


Ram
டிச 21, 2024 17:33

லாரியை அப்படியே எரித்துவிடவேண்டும்


சம்ப
டிச 21, 2024 17:13

எணத்த விசாரிக்க ரது No யூஸ் குண்டாஸ் சரி லாரி பரிமுதல் செஞ்சு உடைச்சு ப ழ ய இரும்புக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை