உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலி சான்று மூலம் நியமனம் அர்ச்சகருக்கு எதிராக நடவடிக்கை; உயர்நீதிமன்றத்தில் தகவல்

போலி சான்று மூலம் நியமனம் அர்ச்சகருக்கு எதிராக நடவடிக்கை; உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோயிலில் போலி சான்று மூலம் பணியில் சேர்ந்த அர்ச்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது. திருச்செந்துார் சுடலை தாக்கல் செய்த பொதுநல மனு: குலசேகரபட்டினத்தில் முத்தாரம்மன் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு அர்ச்சகராக ஹரிஷ் நியமிக்கப்பட்டார். அவர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பணி நியமனம் பெற்றுள்ளார். அவருக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் ஆகாதவர்கள் சுவாமி சிலைகளை தொட்டு அபி ேஷகம், ஆராதனை செய்வது ஆகம விதிகளுக்கு எதிரானது.சென்னை கவுரிவாக்கத்தில் வடகுலசை ஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் முத்தாரம்மன் என்ற பெயரில் கோயிலை உருவாக்கியுள்ளார். சென்னை பக்தர்களை திசை திருப்பி, அக்கோயிலில் வழிபடுமாறு கூறுகிறார். குலசேகரபட்டினம் கோயில் பணி நேரத்தில் சென்னை கோயிலில் கும்பாபி ேஷகம் நடத்தியுள்ளார். குலசேகரபட்டினம் கோயிலுக்கு நிதி இழப்பை ஏற்படுத்துகிறார். ஹரிஷ் அதிகார பலமிக்கவர். அவர் மீது நடவடிக்கை கோரி அறநிலையத்துறை இணைக் கமிஷனருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: போலி சான்று சமர்ப்பித்து பணியில் சேர்ந்தது தொடர்பாக ஹரிஷூக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கமிஷனருக்கு இணைக் கமிஷனர் பரிந்துரைத்துள்ளார். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை குறித்து அறநிலையத்துறை கமிஷனர், இணைக் கமிஷனர், உதவிக் கமிஷனர் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை