உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

கார்களில் கட்சி கொடி கட்டியிருந்தால் நடவடிக்கை: தமிழக அரசு தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கார்களில் கட்சி கொடி கட்டப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.தனியார் வாகனங்களில், 'காவல் துறை, அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்' என, 'ஸ்டிக்கர்' ஒட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை போக்குவரத்து போலீசார் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் இருந்து, டாக்டர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி, தமிழ்நாடு மருத்துவர்கள் நலச்சங்கத்தின் பொது செயலர் டாக்டர் கே.சீனிவாசன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது' என்று உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை, ஜூலை 2க்கு தள்ளிவைத்து உத்தரவிட்ட நீதிபதி கூறியதாவது:

தனி வழி

கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கப்பட்டும், அவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டிய கார்கள் வலம் வருகின்றன. கார்களில் இன்னும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு என்று தனி வழி இருந்தும், அது முறைப்படுத்தப்படவில்லை. நகர சாலைகளில், இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு என்று தனி வழி ஏற்படுத்த வேண்டும்.

நடவடிக்கை

சாலை விபத்துகளை தடுக்க, பள்ளி, கல்லுாரி அளவில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், 'கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கார்களில் கட்சி கொடி கட்டப்பட்டு இருப்பதற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

venugopal s
ஜூன் 15, 2024 16:14

பாஜக கொடி கட்டிச் செல்லும் வாகனங்களும் தமிழ்நாட்டில் நிறையவே உள்ளன!


RaajaRaja Cholan
ஜூன் 15, 2024 15:24

கட்சி கோடி கட்டிய கார்கள் நல்லது தான் , மக்கள் எவனையோ கண்டால் தூர விலகு என்ற பழமொழிக்கு ஏற்ப விலகி செல்வார்கள் , அப்புறம் அவர்களுக்கு எதையோ அடிப்பானேன் எதையோ சுமப்பாண்ணேன் என்ற நிலை வராது


Kasimani Baskaran
ஜூன் 15, 2024 14:45

நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நினைப்பவர்கள் காவல்துறையை டேக் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடலாம்.


Siva
ஜூன் 15, 2024 14:25

திராவிட முன்னேற்றக் கழகம் மாடல் ஆட்சி எந்த தப்பும் நடக்கவில்லை.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜூன் 15, 2024 12:27

கோயம்புத்தூரில் ஒருவர் ஸ்கூட்டர் ஒன்றில் ஒன்றைரை அடி நீளமுள்ள திமுக கொடி கட்டிக் கொண்டு திமுக துண்டு திமுக கரை வேட்டி கட்டி கொண்டு எப்பொழுதும் சாலைகளில் சின்னியம்பாளையம் பகுதியில் அடிக்கடி எல்&டி பைபாஸ் சாலையில் வலம் வருகிறார். திமுக கொடி அதிமுக கொடி கட்டிய கார்கள் அதிவேகமாக செல்கிறது. இரு தினங்களுக்கு முன்பு எல்&டி பைபாஸ் சாலையில் அதிமுக கொடி மற்றும் சைரனுடன் அதிவேகமாக ஒரு கார் சென்றது.


Ram pollachi
ஜூன் 15, 2024 12:01

வாகன பதிவு எண்ணைக் கூட தாங்கள் சார்ந்த கட்சியின் கலரில் எழுதுவது நம் மாநிலத்தில் மட்டுமே.


Ram pollachi
ஜூன் 15, 2024 12:01

வாகன பதிவு எண்ணைக் கூட தாங்கள் சார்ந்த கட்சியின் கலரில் எழுதுவது நம் மாநிலத்தில் மட்டுமே.


Ram pollachi
ஜூன் 15, 2024 12:01

வாகன பதிவு எண்ணைக் கூட தாங்கள் சார்ந்த கட்சியின் கலரில் எழுதுவது நம் மாநிலத்தில் மட்டுமே.


Indhuindian
ஜூன் 15, 2024 10:19

sheer waste of time in these kind of litigations since the police will not be able to enforce discipline amongst the party people.


S Sivakumar
ஜூன் 15, 2024 09:47

நடவடிக்கை எடுக்கப்படும் நல்ல காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது என்ற சந்தேகம் வரும் படி ஏராளாமான கட்சி கொடிகள் கருப்பு கண்ணாடிகளை கொண்ட வாகனங்கள் ஒய்யாரமாக வலம் வந்து கொண்டே இருக்கிறது. இதை தடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை