உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரெட்பிக்ஸ் உரிமையாளர் வீட்டில் அதிரடி சோதனை

ரெட்பிக்ஸ் உரிமையாளர் வீட்டில் அதிரடி சோதனை

திருவாரூர்:கூத்தாநல்லுார் அருகே,ரெட் பிக்ஸ் உரிமையாளர், பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சொந்தமான காட்டேஜ் வீட்டில், நேற்று, போலீசார் சோதனை நடத்தினர்.பெண் காவலர்களை அவதுாறு பேசியதாக, யூடியுப் சேனல் சவுக்கு சங்கர் மற்றும் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோரை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில், டில்லியில், பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்து, திருச்சி அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், வரும், 27ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.சென்னை உள்ளிட்ட, பல இடங்களில்,பெலிக்ஸ் ஜெரால்டு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில், திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுார் அருகே, கோட்டகச்சேரியில், அவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள இரு கன்டெய்னர் காட்டேஜ்களை, போலீசார் சோதனை செய்தனர். அப்போது, பெலிக்ஸ் ஜெரால்டின் மனைவி, அவரது வழக்கறிஞர் இருந்தனர்.சோதனை செய்ய வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பியுள்ளதாக கேட்டு, போலீசாாரிடம் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி வாக்குவாதம் செய்தார். இருப்பினும், அவரை சமாதானப்படுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
மே 19, 2024 05:22

அதானே பார்த்தேன், நான் கூட ரெட் ஜெயண்ட் ஓனர் வீட்டில்தான் ரெய்டு செய்து விட்டார்களோ? என்று பயந்து விட்டேன் - அங்கேயெல்லாம் ரெய்டு போக தைரியம் இருக்காது என்பது தெரிந்தும்


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ