மேலும் செய்திகள்
மதுரை நெல்லைக்கு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
12 minutes ago
காலையில் குறைவு; மாலையில் உயர்வு
15 minutes ago
ஆயுதபூஜை நாளில் ரூ.240 கோடிக்கு சரக்கு விற்பனை
23 minutes ago
சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், வரும் 7ம் தேதிக்கு குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைத்துள்ளது.சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குற்றச்சாட்டு பதிவுக்காக, நேற்று செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்த உத்தரவிட்டது.குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் பரணிகுமார் புதிய மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிபதி எஸ்.அல்லி முன் விசாரித்தார். செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், அமலாக்கத் துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி வாதிட்டனர்.இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு மனுவை ஏற்ற நீதிபதி எஸ்.அல்லி, வரும் 7ம் தேதிக்கு குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைத்தார். அன்றைய தினம், செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று மாலை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி படுக்கையில் இருந்தார். இதை பார்த்த நீதிபதி, 'அவருக்கு என்ன ஆனது' என விசாரித்தார். 'காலையில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல் சோர்வாக இருப்பதால், படுக்கையில் இருக்கிறார்' என சிறை அதிகாரிகள் பதிலளித்தனர்.இதையடுத்து, அவரின் நீதிமன்ற காவலை 52வது முறையாக, வரும் 7ம் தேதி வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
12 minutes ago
15 minutes ago
23 minutes ago