உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.6,772 கோடி ஒதுக்கீடு: 12 துறைகளுக்கு பகிர்ந்தளிப்பு

நகர்ப்புற மேம்பாட்டுக்கு ரூ.6,772 கோடி ஒதுக்கீடு: 12 துறைகளுக்கு பகிர்ந்தளிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கட்டுமான திட்ட அனுமதியின் போது வசூலான, உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேம்பாட்டுக்கான நிதி, 6,772 கோடி ரூபாய், 12 துறைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.கட்டுமான திட்ட அனுமதி வழங்கும் போது, உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுக்காக, 10.70 சதுரடிக்கு, 264 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில், 2007 முதல் நடப்பு ஆண்டு வரை, 5,688 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுஉள்ளது. இருப்பினும், 2025 - 26ம் நிதியாண்டு வரை வசூலாகும் தொகையை உத்தேசமாக கணக்கிட்டு, 12 துறைகளுக்கு, 6,772 கோடி ரூபாயை பகிர்ந்து அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நகராட்சி, மாநகராட்சிகளுக்கு, 3,214 கோடி ரூபாய்; நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு, 1,438 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 'இதை பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட துறைகள், பொதுவான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

VENKATASUBRAMANIAN
ஆக 26, 2024 08:14

மக்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திய பணத்தில் இதை ஏற்பாடுகள் செய்து விட்டு இப்படி பேசுவதிற்கு வெட்கப்பட வேண்டும். மக்கள் கோவிலுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள் உங்கள் ஆடம்பரத்திற்கு இல்லை. உங்கள் காசை போட்டு நடத்த வேண்டியதுதானே


Kasimani Baskaran
ஆக 26, 2024 05:48

பத்தில் ஒரு பங்காவது பொது மக்களுக்கு பயன்படும் வகையில் இருந்தால் நல்லது.


Mani . V
ஆக 26, 2024 03:57

கொள்ளையடிக்க அரியதோர் வாய்ப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை