உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அத்தனையும் பொய்யா கோப்பால்...? வெள்ளை அறிக்கை வெளியிட அரசைக் கேட்கிறார் அன்புமணி!

அத்தனையும் பொய்யா கோப்பால்...? வெள்ளை அறிக்கை வெளியிட அரசைக் கேட்கிறார் அன்புமணி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு இடமில்லாத நிலையில், முதலீடு குவிவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவதெல்லாம் வெறும் மாயை தானா' என்று பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் கடந்த முறை மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nbavhjch&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள 30 வகையான சீர்திருத்தங்களில் ஒவ்வொரு மாநிலமும் எத்தனை சீர்திருத்தங்களைச் செய்திருக்கிறது என்பதன் அடிப்படையில் இத்தகைய தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது.

ஒன்னே ஒன்னு

கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. ஆனால், தமிழ்நாடு ஒரே ஒரு சீர்திருத்தத்தைக் கூட செய்யாததால் , அத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொண்ட 17 மாநிலங்கள் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. தமிழகத்தின் இந்த நிலை அதிர்ச்சியளிக்கிறது.

தலைகுனிவு

தொழில்களைத் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலம் என்று கூறப்படும் கேரளம் சில ஆண்டுகளுக்கு முன் 28ம் இடத்தில் இருந்தது. அதிலிருந்து முதலில் 15ம் இடத்திற்கு வந்த கேரளம் இப்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஆந்திரம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அடுத்த 3 இடங்களை கைப்பற்றியுள்ளன. கர்நாடகம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தமிழகத்திற்கு மட்டும் இடம் கிடைக்காதது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

பயம் எதற்கு?

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.10 லட்சம் கோடிக்கும் கூடுதலான தொழில் முதலீடுகளை ஈர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தமிழக அரசு அடிக்கடி பெருமைப்பட்டு கொள்கிறது. ஆனால், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் ஒப்பந்தங்களாகவே உள்ளன; முதலீடுகள் வரவில்லை. தமிழகத்திற்கு வந்த முதலீடுகள், அதைக் கொண்டு தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள், அவற்றின் மூலம் தமிழக இளைஞர்களுக்கு கிடைத்த வேலைவாய்ப்புகள் ஆகியவை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பா.ம.க., பலமுறை வலியுறுத்தியும் அதை செய்ய தமிழக அரசு மறுக்கிறது. வெள்ளை அறிக்கை வெளியிடும் மரபு இல்லை என்று முதல்வர் கூறுகிறார். மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?

மிரட்டல்

தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டுமானால் பலரை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயங்கள் இருப்பதாகவும், தொழில்தொடங்க எவரும் முன்வர மறுப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனம் நடத்துபவர்களை தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் மிரட்டும் காணொலிகள் வைரலாகி வருகின்றன. இத்தகைய சூழலில் தமிழகத்தில் முதலீடு குவிவதாக தமிழக அரசு கூறிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசின் கூற்றுகள் அனைத்தும் மாயையாகவே தோன்றுகிறது.

வெள்ளை அறிக்கை

தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கான சீர்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு உறுதி செய்யப்பட்ட ரூ.10 லட்சம் கோடி முதலீட்டில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது என்பது குறித்து விரிவான விளக்கங்களுடன் வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன், என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

rama adhavan
செப் 07, 2024 19:42

பாலைவனத்தில் விழுந்த ஊசியை கூட வானில் இருந்து அமெரிக்கா கண்டு கொள்ளும் தொழில் நுட்பம் அதனிடம் உண்டு. எனவே தமிழ்நாட்டில் தொழில் துவங்க உள்ள சூழ்நிலை அதற்கு தெரியும். எனவே அன்னாட்டு முதலீட்டாளர்கள் விவரம் அற்றவர்களா இங்கு முதலீடு செய்ய? அவர்களிடம் என்ன சொல்லி அழைக்க முடியும்? மேலும் மதிய அரசின், ரிசர்வ வங்கியின் அனுமதி இன்றி வெளி நாட்டு முதலீடு நம் நாட்டுக்குள் வர இயலாது. எனவே வெளி நாட்டு முதலீடு, தொழில் எல்லாம் பெட்டி, டீ கடை போல் எல்லாம் இங்கு உடனடியாக திறக்க முடியாது.


vbs manian
செப் 06, 2024 22:08

ஸ்டெர்லிட்டை முடி விட்டார்கள். போர்ட் நிறுவனம் போய் விட்டது. நோக்கியா மூடப்பட்டது. சேலம் எக்கு தயாரிக்கும் நிறுவனம் சமாதி ஆகிவிட்டது. காஸ் குழாய் மின் டவர் சாலை விரிவாக்கம் எல்லாவற்றுக்கும் எதிர்ப்பு . இதெல்லாம் அமெரிக்க நிறுவனங்களுக்கு தெரியுமா.


karutthu kandhasamy
அக் 17, 2024 13:14

அவர்களுக்கு எல்லாம் தெரியும் அதோடு VBS MANIAN பற்றியும் தெரியும்


Ramesh Sargam
செப் 06, 2024 21:14

ஒரேயடியாக தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலம் தமிழகம் இல்லை என்று கூறிவிடமுடியாது. கள்ளச்சாராயம் காய்ச்சுதல், போதைப்பொருள் கடத்தும் தொழில், கந்துவட்டி, மீட்டர் வட்டி வாங்குதல், கட்டப்பஞ்சாயத்து என்று பல தரப்பட்ட தொழில் செய்வதில் தமிழகம் முதலிடம். அதை மறந்துவிட்டீர்களே...


Barakat Ali
செப் 06, 2024 20:16

கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. திமுகவுக்கு பல்லு படாமல் செய்துகொண்டிருக்கும் இடதுசாரிகளை கூல் பண்ண இப்படி அடிச்சு உடுறாரு அன்பு ....


Barakat Ali
செப் 06, 2024 20:15

கேரள மாநிலம் மொத்தம் 9 சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது. இது ஒரு பொய்த்தகவல் ..... மருத்துவர் அன்புமணி ஆதாரம் கொடுப்பாரா ????


Barakat Ali
செப் 06, 2024 19:57

பிசினஸ் டுடே இன்றைய செய்தி "Maharashtra tops Indias FDI second time in a row leaves Karnataka, Delhi way behind" மஹாராஷ்டிரா வுக்கு அடுத்து கர்நாடகா, தில்லி, தெலுங்கானா, குஜராத் ஆகியவை வருகின்றன .... கவனிக்கவும் இந்த மாநிலங்கள் எவற்றிலும் மாநில முதல்வர்கள் வெளிநாடு போயி முதலீடுகளுக்காகத் தொங்கிக்கொண்டு இருந்ததாகத் தகவல் இல்லை ..... இன்னொரு விஷயம் பட்டியலில் ஆறாவதாகத்தான் தமிழகம் வருகிறது .....


Barakat Ali
செப் 06, 2024 19:53

அமெரிக்க முதலீடு பத்தி விஷயம் தெரிஞ்சவனெல்லாம் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டான் .... அதை திசை திருப்ப மகாவிஷ்ணு விவகாரம் ..... அரசியல் நிகழ்வுகளை நல்லா கவனிக்கிறவங்களுக்கு புரியும் ....


vbs manian
செப் 06, 2024 19:38

சார் நீங்க ரொம்ப தர்ம சங்கடமான கேள்வி கேட்கிறீர்கள். ஆகாச பந்தலிலே பொன்னுஞ்சல் ஆடுதம்மா.


Barakat Ali
செப் 06, 2024 19:33

முதலீடு கொண்ட்டு வர்றேன் ன்னு சொன்னா நம்பாம கேள்வியெல்லாம் கேக்குறாரே ...... சேர்த்ததை பதுக்க போனதை கண்டு புடிச்சுட்டாரோ ? ஆரிய அடாவடி ன்னும் சொல்ல முடியாது ..... ம்ம்ம்ம்ம் ..... என்ன பண்ணலாம் ????


Venkataraman
செப் 06, 2024 18:57

இந்த தொழில் முதலீடுகளை பற்றி திமுக அரசு செய்து வரும் பிரசாரங்கள், அறிவிப்புகள் அனைத்தும் மக்களை ஏமாற்றும் வேலை. இதில் சற்றும் உண்மையில்லை. இதற்கு முன்பு கூட பல தடவை அரசு செலவில் மனைவியுடன் கூட வெளிநாடுகளுக்கு சென்றார் ஸ்டாலின். அதனால் கிடைத்த தொழில் முதலீடுகளை பற்றி எதுவும் அறிவிக்கவில்லை. அத்தனையும் மோசடி வேலை. ஊரை ஏமாற்ற அறிவிப்புகளை மட்டும் வெளியிடுகிறார். தன்னிடம் உள்ள கருப்பு பணத்தை வெள்ளையாக்கு வதற்காகதான் வெளிநாடு செல்வதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.திமுக என்றாலே ஊழலும், கொள்ளையும்தான். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது.