உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புயல் எதிரொலியால் அந்தமான் விமானங்கள் ரத்து

புயல் எதிரொலியால் அந்தமான் விமானங்கள் ரத்து

சென்னை:'ரேமல்' புயல் முன்னெச்சரிக்கையால், சென்னை - - அந்தமான் இடையே இயக்கப்படும் இரண்டு, 'ஏர் இந்தியா' விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.சென்னையில் இருந்து நேற்று காலை 5:05 மணிக்கு செல்ல வேண்டிய விமானம் மற்றும் காலை 7:55 மணிக்கு அந்தமானில் இருந்து புறப்பட வேண்டிய விமானம், நேற்று ரத்து செய்யப்பட்டன.இதேபோல், கோல்கட்டா, விசாகப்பட்டினத்தில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா விமானங்களும், அந்தமானில் இருந்து கோல்கட்டா, விசாகப்பட்டினம் வர வேண்டிய ஏர் இந்தியா விமானங்களும், நேற்று ரத்து செய்யப்பட்டன.இருப்பினும், 'இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் ஆகாஷா ஏர்லைன்ஸ்' பயணி யர் விமானங்கள், வழக்கம் போல் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை