உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 295 இன்ஜி., கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை நோட்டீஸ்

295 இன்ஜி., கல்லுாரிகளுக்கு அண்ணா பல்கலை நோட்டீஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் வேலை பார்ப்பது போல கணக்கு காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, 295 இன்ஜினியரிங் கல்லுாரிகளிடம் விளக்கம் கேட்டு, அண்ணா பல்கலை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.அதில், 'சம்பந்தப்பட்ட கல்லுாரிகள், ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையேல், நிர்வாகத்திடம் எந்த விளக்கமும் இல்லை என்று கருதப்படும். நடப்பு கல்வியாண்டில் கல்லுாரியில் நடத்தப்படும் அனைத்து படிப்புகளையும் அங்கீகரிக்காமல், தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க பல்கலைக்கு அதிகாரம் உள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, ஆசிரியர்களின் ஆதார் அட்டை விபரங்களை, அரசு இணையதளத்துடன் இணைக்கவும், பல்கலை ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ஆரூர் ரங்
ஜூலை 30, 2024 11:49

சூரப்பா தலைமையில் இந்தப் பல்கலைக்கழகத்தின் நிலை நன்றாக இருந்தது .அவரை ஏன் எதிர்த்தார்கள் என்பது இப்போது புரிகிறது


Nagarajan D
ஜூலை 30, 2024 09:55

எல்லா கல்லூரிகளும் கவர் கொடுத்துதான் எல்லா ஆய்வுகளையும் சரி செய்கிறது. இதில் கல்லூரிகளின் தவறை விட ஆய்வுக்கு வரும் ஆட்களின் தவறே மிக மிக அதிகம். வருகிறவர்களுக்கு சரியாக கவனிக்கவில்லை என்றால் அதுங்க ஏதாவது குறை சொல்லி கையெழுத்து போடுவதில்லை. கவருக்கு மயங்காதவனுங்க அரசு பணியிலிருப்பதில்லை.. PF அக்கௌன்ட் ஆதாருடன் இணைக்கப்பட்டுத்தானே உள்ளது ஏன் pf துறை இதை கருத்தில் கூட எடுத்துக்கொள்ளவில்லை... ஒரே கேவலமான ஆசிரியனுக்கு பல அக்கௌட்டிலிருந்து PF வருவதை அறியமுடியவில்லையா? கேவலமானவர்கள் அரசு ஊழியர்கள் தான்....குற்றவாளிகளை உடனே ஆசிரியர் பணியிலிருந்து துரத்தவேண்டும்... அவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் அரசு கடுமையான தண்டனை கொடுத்து நஷ்ட்ட ஈடாக பல கோடிகள் பெறப்படவேண்டும்.இதையெல்லாம் சரி செய்தால் இருக்கவே இருக்கிறது நமது நிதிநீதி துறை எவனாவது ஒரு நிதி அரசர் இடைக்கால தடை உத்தரவு போடுவான்... அத்தோடு இந்த கேசு செத்துவிடும்


veeramani
ஜூலை 30, 2024 09:20

அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து வருடம் ஒருத்தர் இன்ஸ்பெக்ஷன் செல்வார்கள் அவர்களது கண்ணில் எப்படி இந்த மோசடி படவில்லை. தமிழக மாணவர்களிடம் நடந்த மிக பெரிய மோசடி. பல்கலைக்கழகம் முதலில் அங்கீகாரம் ரத்து செய்யட்டும். இனிமேல் திருந்துவது சரியல்ல முதலில் இந்த கல்லூரி பட்டியலை இணைய தளத்தில் வெளியிடவேண்டும். அதன்முலம் மாணவர்கள் இந்த கல்லூரிகள் களை தவிர்க்க முடியும்


Nagarajan D
ஜூலை 31, 2024 17:30

அண்ணா யூனிவர்சிட்டி ஆள் கவருக்கு மயங்காத ஆளா என்ன... வர எல்லாரும் அய்யோக்கியனுங்க தான்...அண்ணா யூனிவர்சிட்டி ரெஜிஸ்ட்ரார் அந்தம்மா அங்கேயே உக்காந்து 400 கோடி ஏப்பம் விட்டப்பவே இவனுங்களால கண்டுபிடிக்க முடியல இவனுங்க எப்படி மத்தத கண்டுபிடிக்க முடியும்... மானம் மரியாதை கெட்ட அரசு ஊழியர்கள்


rama adhavan
ஜூலை 30, 2024 07:21

வருமான வரி துறையின் கண்களில் இந்த ஊழல் ஏன் படவில்லை? மர்மம் ஆக உள்ளதே? வருமான வரி விலக்கு பெற்று இருப்பார்களோ? இருப்பினும் ஊழல் கல்லூரிகளின் வருமான வரி விலக்கை துறை தாக்கீது அனுப்பி, விளக்கம் பெற்று ரத்து செய்யலாமே?


rajan
ஜூலை 30, 2024 06:31

7 நாட்களுக்கு பிறகு தகவல் கொடுத்த இயக்கம் தவறாக செய்தி வெளியிட்டு விட்டது என்று சொல்லி நடவடிக்கை ஏதும் எடுக்காமல் விட்டுவிடும் அண்ணா பல்கலை


sankaranarayanan
ஜூலை 30, 2024 05:54

பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில் வேலை பார்ப்பது போல கணக்கு காட்டப்பட்ட விவகாரம் உலகில் வேரெங்குமே காணமுடியாது இதுதான் முன்னேற்ற கழகத்தின் தலையாய கடமை பிறகு இவர்கள் எப்படி நீட் தேர்வுக்கு ஆதரவு கொடுப்பார்கள் கேட்டால் உலகிலேயே ஆக்ஸ்போடு பல்கலையத்திற்கு அடுத்தது இதுதான் என்பார்கள் இதற்கென்றே ஓர் கூட்டம் திரிகின்றது


Kasimani Baskaran
ஜூலை 30, 2024 05:24

அவனவன் வேலை இல்லை, வேலை வேண்டும் என்று நாயாய் பேயாய் அலையும் பொழுது ஒரே ஆள் இத்தனை கல்லூரிகளில் பேராசிரியராக எப்படி இருக்க முடிந்தது? பிஎப் என்று வரும் பொழுது கோடிகளில் வருமானம் இருக்குமே - அதையெல்லாம் யாரும் ஆராயவில்லையா? பல டம்மி அரசு அமைப்புக்கள் இருப்பது தெளிவாகிறது.


rama adhavan
ஜூலை 30, 2024 07:17

அவர்கள் லெட்டர் பாட் போஸ்டிங் தான். அவர்களுக்கு சம்பளம், படிகள், பி எப் வழங்கியதான பணம் நம்பர் 2 கணக்கிற்கு போய் விடும். பெரும்பாலும் காலேஜ்கள் டிரஸ்ட் நிர்வாகத்தில் இருக்கும். எனவே பொது மக்கள் கவனத்திற்கு வராது. நிர்வாகம், ஆடிட்டர், டிரஸ்ட் ரெஜிஸ்ட்ரார் இவர்களுக்கே இந்த ஊழல் தெரியும்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி