உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு

அண்ணாமலை உருவ பொம்மை எரிப்பு

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி குறித்து அண்ணாமலை பேசியிருந்தார். இந்நிலையில் அவர் அவதுாறாக பேசியதாக கூறி திருநெல்வேலியில் அ.தி.மு.க., தொழில்நுட்ப பிரிவினர் அன்பு அங்கப்பன் தலைமையில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் அண்ணாமலை உருவ பொம்மையை செருப்பால் அடித்து, தீயிட்டு எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Anand RRK BROS
ஆக 27, 2024 13:03

தமிழகம் திமுக - பாஜக அரசியல் களமாக மாறி விட்டது அது அப்படி தான் அமையும், அஇஅதிமுக கொள்கை கிடையாது அதுனாலே அஇஅதிமுக ஓரம்கட்டபடும். இது இயல்பு பாஜக அண்ணாமலை வளர்ச்சியை தான் கொடுக்கும்.


metturaan
ஆக 27, 2024 10:09

தேர்தல் தோல்வி... அண்ணாமலை கணக்கு தவிடு பொடியாக அஇஅதிமுக காரணம்... வன்மத்தை... வார்த்தைகளில் காட்ட தொடங்கினார் மலை....விளைவை... கழகம் அவர்கள் வழியில் காட்டுகிறது போலும்


ramani
ஆக 27, 2024 06:50

வர வர அதிமுகவும் காங்கிரஸ் கட்சி போல் ஆகிவிட்டது. பத்து பேரை சேர்க்க கூட முடியவில்லை. பாவம். எப்படி இருந்த அதிமுக இப்படி ஆகிவிட்டது


Venkatesh
ஆக 27, 2024 06:24

தற்குறி அண்ணண்களின் தறுதலை தம்பிகளால் அது தான் முடியும்..... எவ்வளவு தான் ஆடுவீர்கள் என்று பார்ப்போம்


முக்கிய வீடியோ