உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மயிலாடுதுறை காங்., வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் அறிவிப்பு

மயிலாடுதுறை காங்., வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை:தி.மு.க., கூட்டணியில், தமிழக காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், மயிலாடுதுறை தொகுதியை தவிர மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், மயிலாடுதுறை தொகுதி காங்., வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணனை, காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் நேற்று இரவு அறிவித்தார். சுதா ராமகிருஷ்ணன், சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர். மகளிர் காங்கிரஸ் தலைவியாக உள்ளார். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை ராகுல் மேற்கொண்ட போது, அந்த பாதயாத்திரையில் இறுதி வரை சுதா ராமகிருஷ்ணனும் பங்கேற்றார்.விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ., விஜயதாரணி, பா.ஜ.,வில் இணைந்ததால், மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், சுதா ராமகிருஷ்ணனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
மார் 27, 2024 07:32

இப்போ தெரிகிறதா திருட்டு திராவிட ட்ரக் மாஃபியா கும்பலும் உலக ஊழல் புகழ் கான் கிராசும் மார்கத்தவேற்களின் எதிரி என்று ஒரு மார்க வேட்பாளர் கூட இல்லை


மேலும் செய்திகள்