உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பணிக்கு தமிழில் 40 சதவீத மார்க் நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு

அரசு பணிக்கு தமிழில் 40 சதவீத மார்க் நிபந்தனையை எதிர்த்து மேல்முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற, தமிழக அரசின் அரசாணையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனை சட்டத்தில், கடந்த 2021ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், 'அரசு பணிக்கான தேர்வில், தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீதம் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால், பொது அறிவு மற்றும் திறனறிவு தேர்வுத்தாள்கள் திருத்தப்படாது' என, டிசம்பரில் அரசாணை வெளியானது. கடந்த ஜனவரியில், காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு அறிவிப்பை, அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட்டது.இதையடுத்து, தமிழ் மொழித்தாள் தேர்வில், 40 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்தும், தேர்வாணையத்தின் அறிவிப்பை எதிர்த்தும், குரூப் - 4 தேர்வுக்கு தகுதி பெற்ற 10 பேர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'குரூப் - 4 பதவிகளில் இருப்பவர்கள், மக்களுடன் தொடர்பில் இருப்பதற்கு, தமிழில் புலமை பெற்றிருப்பது அவசியம். எனவே, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது' எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வு, அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தது. அப்போது, இந்த வழக்கில் வாதிட உள்ளதாக மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம் தெரிவித்தார். இதையடுத்து, முந்தைய முடிவை மாற்றிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தமிழ்வேள்
ஜூன் 06, 2024 19:37

தமிழகத்தில் பிறமொழி ஆசாமிகள் மாநில அரசு ஊழியர்கள் ஆனால், திமுகவின் ஊழல்களை தடையின்றி தொடர வசதியாக இருக்கும் என்ற காரணத்தால், அரசு ஆணையை எதிர்த்து வாதாட நளினி சிதம்பரத்தை திமுக வே மறைமுகமாக தூண்டி அமர்த்தி கொடுத்து இருக்க வாய்ப்பு உண்டு.....


Panchalam Soundararajan
ஜூன் 06, 2024 12:51

வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த தீர்ப்பை எதிர்த்து மனுதாரர்களின் வழக்கறிஞர் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள். தொழில் வேறு கொள்கை வேறா? அல்லது காங்கிரஸ் கட்சி இதை ஆதரிக்கிறதா? தமிழக அரசு அவருடன் ஏன் பேசக்கூடாது? இல்லை அரசே அவர்களுக்கு மறைமுகமாக துணை போகிறதா? எனது 40 ஆண்டு கால அரசு பணியிலும் அரசு ஊழியர் தொழிற்ச்சங்கத்திலும் இருந்த அனுபவத்தில் 1970 களில் வெளியிட்ட வழிகாட்டு ஆணைகள் படி மாநில அலுவலங்களில் பணி புரியும் மூன்று நான்காம் பிரிவு மத்திய ஊழியர்களை அந்த மாநில அளவில் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது இல்லை. மாநிலத்திலேயே இது போன்ற ஆணைக்கு எதிர்ப்பு இருந்தால் தமிழ் வளர்ச்சி எப்படி முடியும்.


சூத்திரன்
ஜூன் 06, 2024 12:27

நிறைய அரைவேக்காடுகள் தவறாக புரிந்து கொண்டுள்ளது...பிஜேபி என்னை போன்று தனியாக தேர்தலில் நின்று என்னை விட அதிகம் ஓட்டு வாங்கினால் கட்சியை களைத்து விடுவேன் என்று சீமான் சொன்னது...இது போன்ற அரைவேக்காடுகள் கோர்ட்டுக்கு பொய் இருக்கும் போல ...மாவட்ட கலெக்டர் வந்தார் என்பதற்கு பதிலாக மாவாட்ட கலெக்டர் வந்தார் படிக்கும் அரைவேக்காடுகள்.....


Ramesh Sargam
ஜூன் 06, 2024 12:22

தமிழக முதல்வருக்கு தமிழில் ஒரு தேர்வு வைத்து, அதில் அவர் நாற்பது சதவிகித மதிப்பெண்கள் பெற்றால் முதல்வராக தொடரவேண்டும் என்று ஒரு பொதுநல வழக்கு போடவேண்டும்.


Apposthalan samlin
ஜூன் 06, 2024 10:33

அந்த பத்து பெரும் தமிழர்கள் அல்ல தமிழ் தாள் எளிதாக இருக்கும்


Varadarajan Nagarajan
ஜூன் 06, 2024 09:27

தமிழ் தமிழ் என கூவி, ஆண்டுதோறும் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் நிதி அளித்து அதை வளர்க்க படாதபாடு படுகின்றது அரசு. நமது தாய் மொழியை வளர்க்க தமிழ் சங்கம், நூலகம் என அரசு எத்தனையோ செய்து பார்க்கின்றது. அறிஞர்கள், புலவர்கள், காவலர்கள் என எத்தனையோபேர் பாடுபடுகிறார்கள். ஆனாலும் தேர்வு மதிப்பெண் 40 என வைத்தாலும் தேறாது என்பதால் வழக்கு தொடரும் நிலையில்தான் உள்ளது என்பது வேதனை. இவர்கள் அரசு பணியில் சேர்ந்து அலுவலக கோப்புகளை படித்தும் பரிந்துரைகள் எழுதினால் எப்படி இருக்கும் என புரிந்துகொள்ளமுடிகின்றது


Sampath Kumar
ஜூன் 06, 2024 08:46

தமிழ்த்தில் இருந்து கொண்டு தமிழ் நாடு அரசு வேலைக்கு வருபவர்கள் தமிழில் குரைந்த பட்ச மார்க் 40 கூட வாங்க வக்கற்றவர்கள் எல்லாம் என்னத்துக்கு அரசு பணிக்கு வருகிறீர்கள் இதை ஏதிர்த்து நளினி சிதம்பரம் வாதாடுகின்றார் வெக்க கேடு நாம் தமிழர் கட்சி கரண் சொல்வது போல காங்கிரஸ் காரன் கதர் அணிந்த பிஜேபி கட்சி பிஜேபிக்காரன் காவி அணிந்த காங்கிரஸ் கட்சி என்று தெளிவாகவே சொல்லி உள்ளன


சி சொர்ணரதி
ஜூன் 06, 2024 10:51

அறிவாளியான சம்பத்! தமிழக அரசு போட்ட சட்டத்திற்கு பா ஜ க வை காரணம் சொல்லும் புத்திசாலி சீமான் பேசுகின்ற மாதிரி கட்சியில் உள்ளவர்களும் பேசுவர். திமுக அரசு ஆட்சியில் போட்ட அரசாணை, .அதை எதிர்த்து கேஸில் ஆஜர் ஆக போவது காங்கிரஸை சேர்ந்த நளினி சிதம்பரம் . இதில் எங்கிருந்து பா ஜ க வந்தது. சீமான் சொல்லிய மாதிரி என்னை விட அதிக ஓட்டு பா ஜ க வாங்கிவிட்டால் கட்சியை கலைத்து விடுவேன் என்று கூறினார். கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாள்.


வாய்மையே வெல்லும்
ஜூன் 06, 2024 08:37

எதற்கெடுத்தாலும் தமிழ் தமிழ் என பீற்றி கொள்ளும் திராவிட மாடல் அரசின் ஆளும் பல நபர்களுக்கே தமிழ் அறிவு பூஜ்யம். இவர்கள் தான் இந்த நாட்டு மன்னர்கள் .எல்லாம் தலைவிதி


N Sasikumar Yadhav
ஜூன் 06, 2024 08:09

அரசு பள்ளியில் படித்தவர்களுக்கே அரசு பணிகள் என நிபந்தனை விதித்தால் அரசு பள்ளிகள் தரம் உயரும் . மேற்படிப்பு வேண்டுமேன்றால் பணியாற்றி கொண்டே படித்து கொள்ளட்டும்


ஆரூர் ரங்
ஜூன் 06, 2024 07:01

தமிழை வளர்க்க சிதம்பரம் குடும்பம் எப்படியெல்லாம் பாடுபடுகிறது? தமிழிசை சங்கம் அமைத்த குடும்பம்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ