உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாக்டர், நர்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

டாக்டர், நர்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் பணியாற்ற, டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிய, மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், டாக்டர்கள், நர்ஸ்கள், தலா, 208 பேர், மருத்துவ பணியாளர்கள், 832 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். டாக்டர்களுக்கு மாதம், 60,000; நர்ஸ்களுக்கு, 18,000; மருத்துவ பணியாளர்களில் கிரேடு - 1 பணியாளர்களுக்கு 14,000; உதவியாளருக்கு 8,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.இந்த பணிகளில் சேர விரும்புவோர், வரும் 24ம் தேதிக்குள், அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்கலாம். நேர்முகத்தேர்வு ஏப்ரல், 1ல் நடத்தப்பட்டு, 2ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., இருக்கும் போது, மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், ஏன் பணி அமர்த்த வேண்டும். இப்பணியிடங்களை, ஏற்கனவே எம்.ஆர்.பி., தேர்வு எழுதி, தகுதி பெற்றவர்களை வாயிலாக நிரப்ப வேண்டும் என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர் பெருமாள் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.

சவுதியில் நர்ஸ் வேலை

'சவுதி அரேபியாவில், பெண் செவிலியர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

சவுதி அரேபியா அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பணி அனுபவத்துடன், பி.எஸ்.சி., நர்சிங் தேர்ச்சி பெற்ற, 35 வயதுக்கு உட்பட்ட, பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். இவர்களுக்கான நேர்காணல், ஏப்ரல், 27 முதல் 30ம் தேதி வரை, கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இதுகுறித்த விபரங்கள், www.omcmanpower.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள், தங்கள் சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் அனுபவ சான்றிதழ் போன்றவற்றை, gmail.comஎன்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, ஏப்ரல், 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை