மேலும் செய்திகள்
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
2 hour(s) ago
சென்னை: நீர்வளத்துறையில், முதன்மை பொறியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களில், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நீர்வளத்துறையில் முதன்மை தலைமை பொறியாளராக இருந்த அசோகன், அரசின் சிறப்பு செயலராக இருந்த முருகன், தலைமை பொறியாளர்களாக இருந்த சுரேஷ், சுப்பிரமணியன் உள்ளிட்ட 19 பேர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றனர்.இதையடுத்து, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளராக மன்மதன், மாநில நீர்வள மேம்பாட்டு முகமை தலைமை பொறியாளராக கோபாலகிருஷ்ணன், திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக தயாளகுமார், கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளராக முருகேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.பொதுப்பணி துறையில் தலைமை பொறியாளர்களாக இருந்த ஆயிரத்தரசு ராஜசேகரன், காசிலிங்கம், அன்பரசன், சிறப்பு செயலராக இருந்த தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோரும் பணி ஓய்வு பெற்றனர். இவர்கள் பதவிகளுக்கும் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
2 hour(s) ago