உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!

பா.ம.க., துண்டு அணிந்து மாணவர்கள் நடனம்: பள்ளி தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!

நாமக்கல்: கிருஷ்ணகிரி அருகே பள்ளி விழாவில், பா.ம.க., துண்டு அணிந்து கொண்டு மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது: நாங்கள் மொழி பெயர்ப்பாளர்களை உருவாக்கவில்லை. திறமையாளர்களை உருவாக்கத்தான் இரு மொழிக் கொள்கை தேவை என சொல்கிறோம். நாம் எல்லோரும் இரு மொழி கொள்கை தான் படித்து விட்டு வந்திருக்கிறோம். நம்ம பிள்ளைகளும் அதை தான் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aepswmh6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கிறீர்கள். எங்க பிள்ளை ஆசைப்பட்டால் எவ்வளவு மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளட்டும். கட்டாயாமாக இருக்க கூடாது என்பது தான் எங்களது கருத்து. நீங்கள் மும்மொழி கொள்கையை ஒப்புக் கொண்டால் தான் நிதி தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? மும்மொழிக் கொள்கைக்கு பள்ளிக்குழந்தைகளிடம் கையெழுத்து வாங்குவது, ரயிலில் பிஸ்கட் கொடுத்து பயணிகளை ஏமாற்றுவது போல் இருக்கிறது. பிஸ்கட் மிட்டாய் கொடுத்து ஏமாற்றும் வேலை எல்லாம் செய்யக்கூடாது. மிஸ்டு கால் கொடுத்து ஆட்கள் சேர்ப்பதற்கான தொடர்ச்சியாக தான் பார்க்கிறோம். மும்மொழி கொள்ளை குறித்து பெற்றோர்களிடம் சொல்லுங்கள். முதலில் நீங்க வீடு வீடாக போய் தான் கையெழுத்து வாங்க வேண்டும். பள்ளிகளுக்கு வர கூடிய பிள்ளை பயமுறுத்துவது, கையை பிடித்து கொண்டு வந்து மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி அடுத்த சோப்பனுார் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில், மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, சில மாணவர்கள், பா.ம.க., துண்டு அணிந்தபடி கலை நிகழ்ச்சியில் நடனம் ஆடினர். இந்த வீடியோ வைரல் ஆன நிலையில், பள்ளியில் முதன்மைக்கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். அதன் முடிவில், பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை, அமைச்சர் மகேஷ் இன்று உறுதி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Matt P
ஏப் 08, 2025 23:52

எதுக்கு பிள்ளைகளுக்கு கஷ்டத்தை கொடுக்கிறீர்கள் என்கிறார். இவரு பிள்ளைக்கு தமிழ் frencho ஜெர்மனோ படிச்சிட்டு இங்கிலீஷும் படிச்சு தமிழ் படிக்கிறார்னா தமிழும் படிப்பது கஷ்டமாயிருக்காது போலிருக்கு. ஏம்பா தம்பி மகேஷ் ...என்ன பேசினாலும் நம்ப வைக்கிற மாதிரி பேசுப்பா... அரசியலில் இருக்கேன் என்று வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது.


raja
மார் 13, 2025 16:51

இதே திமுக துண்டு போட்டுவந்தால் ஒரு ........ ம்ம் பிடுங்கி இருக்க மாட்டீங்க திருடர்களே...


Santhosh kumar
மார் 13, 2025 11:45

விஜயகாந்த் பாட்டு கே ஒரு தலைமையாசிரியர் நடனமாடி அதை தன் சுய விளம்பரத்திற்காக youtube போட்டுக் கொள்வார். இதை கல்வித்துறை கவனத்தில் கொள்ளாது ஏனெனில் அவர்ஆளும் கட்சியின் ஆதரவாளர் .


Venkatesan Srinivasan
மார் 10, 2025 23:29

அரசு பள்ளிகளில் வாத்திகளுக்கு முதலில் சிபிஎஸ்சி தரம் உள்ளதா என சோதிக்க வேண்டும். அந்த வாத்திகளும் சமச்சீர் தேறா விடியா மாட்டலாக இருந்தால் என்ன செய்வது? டுமீல் நாட்டில் அரசு வழி கல்வி சுமார்தான். தரமெல்லாம் 1960 - 70களோடு போயே போய் விட்டது. இதுவும் தேசிய கல்வி கொள்கை ஏற்க மறுக்க ஒரு காரணமாக இருக்கலாம்.


venkat
மார் 10, 2025 06:47

எல்லாம் நீங்க செய்யாதது எதுவும் இல்லை பிரீயா விடுங்க


நிக்கோல்தாம்சன்
மார் 08, 2025 23:45

அவர்கள் வைத்து ஆடியது கருநாடக கொடியின் கலர்


sankaranarayanan
மார் 08, 2025 21:21

அப்பாவும் புள்ளையாண்டானும் எப்படி இருவரும்தான் தமிழகத்தை ஆளவேண்டும் என்று கூறுகிறார்களோ அதே போன்றுதான் இரு மொழி கொள்கையும் யார் வேண்டுமானாலும் நாட்டை ஆளலாம் என்றிருப்பதுதான் மும்மொழிகொள்கை


theruvasagan
மார் 08, 2025 20:00

ரெண்டு மொழிக்கு மேலே படிக்க விடாத உங்கள் கொள்கையும் திணிப்புதானே.


Karthik
மார் 08, 2025 22:31

அதிலென்ன சந்தேகம்...??


நிக்கோல்தாம்சன்
மார் 12, 2025 07:15

நீங்க யோசித்து எழுதறீங்க, சிலர் பூனை கண்ணை மூடிக்கொண்டாள் உலகமே இருண்டு விட்டது என்று நம்புவார்களே


nagendhiran
மார் 08, 2025 19:56

திமுக துண்டு அனிந்து ஆடியிருந்தா? பொத்திட்டு இருந்திருப்பான்?


Subramanian Marappan
மார் 08, 2025 16:17

உங்கள் துணை முதல்வரின் தமிழும் தற்குறி ஆங்கிலமும் அரைகுறை. இதில் ஏதோ கிருத்துவ ஆங்கில பள்ளியில் படைத்ததாக புருடா வேறு. பசங்க பாமக துண்டு போட்டாங்கனு தலைமை ஆசிரியர் மாற்றம் இருக்கட்டும். உங்கள் அமைச்சர் ஒருத்தர் திமுக சின்னம் கொண்ட டீசர்ட் போட்டுட்டு திரியராரே உங்கள் முதலமைச்சர் மாற்றப்படுவாரா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை