உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபை காங்., கட்சி நிர்வாகிகள் நியமனம்

சட்டசபை காங்., கட்சி நிர்வாகிகள் நியமனம்

சென்னை:தமிழக சட்டசபை காங்கிரஸ் துணைத் தலைவராக முனிரத்தினம் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக சட்டசபை காங்., தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை கட்சி மாநிலத் தலைவரானதும், சட்டசபை காங்., தலைவராக ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டார். கட்சி கொறடாவாக இருந்த விஜயதாரணி தன் பதவியை ராஜினாமா செய்ததால் அப்பதவியும் காலியானது.சட்டசபை கூட்டம் இன்று துவங்க உள்ள நிலையில் சட்டசபை காங்., துணைத் தலைவராக எம்.எல்.ஏ., முனிரத்தினம், கொறடாவாக ஹசன் மவுலானா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.முனிரத்தினம் ஐந்தாவது முறைாக எம்.எல்.ஏ.,வாக உள்ளார். முதல் முறை எம்.எல்.ஏ.,வான நிலையில் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ள அசன்மவுலானா, முன்னாள் எம்.பி., ஹாரூன் மகன் ஆவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை