உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலின் பற்றி எவன் பேசினாலும் அட்டாக் பண்ணுங்க

முதல்வர் ஸ்டாலின் பற்றி எவன் பேசினாலும் அட்டாக் பண்ணுங்க

துாத்துக்குடி: ''முதல்வர் குறித்து அவதுாறாக பேசும் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினரை அடித்தாலும் சரிதான்; விரட்டினாலும் சரிதான் என, துாத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துாத்துக்குடியில் நடந்த தி.மு.க., வடக்கு மாவட்ட பிரதிநிதிகள் கூட்டத்தில், அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:தி.மு.க., தலைவராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை எந்த தேர்தலிலும் அவர் தோல்வியை சந்தித்ததில்லை. இப்படியொரு முதல்வர் இந்தியாவிலேயே இல்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஏதாவது ஒரு திட்டம் வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அனைவருக்கும் திட்டங்கள் தீட்டி செயல்படுவதால், அவருக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. தேர்தல் நெருங்கி வருகிறது. கூட்டணி பேச்செல்லாம் விறுவிறுப்பாக நடக்கப் போகிறது. தி.மு.க., கூட்டணி குறித்து, கட்சி மேலிடத்தில் பேசிக் கொள்வர். தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் தேர்வு எல்லாவற்றையும் முதல்வர் பார்த்துக் கொள்வார். தமிழகத்தில் சிறப்பான ஆட்சி செய்து வரும் முதல்வருக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில், பா.ஜ.,வினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். அதை அனுமதிக்க முடியாது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு 40 வயது கூட இருக்காது. ஆனால், தமிழக அரசியலில் பழுத்த அரசியல்வாதியாக இருக்கும் நம் முதல்வரைப் பார்த்து தேவையில்லாமல் பேசி வருகிறார். துணை முதல்வர் உதயநிதியையும் விமர்சிக்கிறார். உச்ச பட்சமாக, 'கெட்-அவுட் ஸ்டாலின்' என டுவிட் போட்டு, அதை 'டிரெண்டிங்' ஆக்குகிறார். இதைச் சொல்லக் கூட எனக்கு பிடிக்கவில்லை. அப்படியொரு அருவருப்பான காரியத்தை அண்ணாமலை செய்திருக்கிறார். அதற்கு தி.மு.க., தரப்பில் ரியாக்ஷன் எதுவும் இல்லை. கட்சியின் உண்மையான தொண்டர்கள், தி.மு.க.,வை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இனி, எவன் தி.மு.க.,வையோ, முதல் வரையோ பற்றி பேசினால், நேரடியாக 'அட்டாக்' பண்ணுங்கள் அவனை அடித்தாலும் சரி; விரட்டினாலும் சரி... எப்படியோ செய்யுங்கள். உங்க ஆக்ஷ னுக்குப் பின், மறுபேச்சு பேசக்கூடாது. மிசா காலத்தையே பார்த்தவர்கள் நாம். தி.மு.க.,வில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. அதனால் துணிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

வாய்மையே வெல்லும்
பிப் 25, 2025 05:34

ரவுடிக்கும்பல் மாடல் மண்ணாங்கட்டி அரசு


Krishnamurthy Venkatesan
பிப் 24, 2025 16:53

2026 தேர்தலில் திராவிட கட்சியில் seat உங்களுக்குத்தான். அமித்ஷா வேடிக்கை பார்ப்பார் என எண்ணாதீர்கள். நாகரீக அரசியலை உங்களிடம் எதிர்பார்த்தது மக்களின் தவறு. உங்கள் கட்சியில் நாட்டின் பிரதமரை getout என்று சொல்வார்களாம், அதற்கு அவர்கள் வாய்மூடி மௌனியாக இருக்க வேண்டுமாம். என்ன நியாயம்?


தமிழன்
பிப் 24, 2025 13:57

திருவாரூரிலிருந்து திருட்டு ரயில் ஏறி வித்தவுட்டில் வந்து பிச்சையெடுத்து பின் பாதி தமிழ் நாட்டையே கொள்ளையடித்து ஊரான் வயித்தில் பிழைப்பு நடத்தி தருட்டுத்தனமாக சொத்து சேர்த்த தலைவனின் எச்சையை பொறுக்கி திங்கும் அல்லக்கை ஈ..ப்பிறவி முண்டம் இவனுக்கே இவ்வளவு இருந்தா வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு வேர்வை சிந்தி உழைக்கும் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்


Chandrasekaran
பிப் 24, 2025 11:49

சொற்போர் கடந்து மற்போரா முகத்தில் முகம் பார்க்கலாம் மமுகமெல்லாம் ரணம் நேரலாம். வளர்ச்சிப் பாதையில் நாம்


sankar
பிப் 24, 2025 08:46

பதவிக்காக பேசும் தகுதியில்லா தற்குறி. பொய் சொல்லும் முதல்வர். அவுட் விரைவில்.


C janarthanan
பிப் 24, 2025 14:27

100/100 சரியான கருத்து.


S.jayaram
பிப் 24, 2025 08:18

ஏற்கனவே இந்த நிலைப்பாடுதான் 1976 இல் இருந்து திமுகவின்னரால் நடத்தப்படுவது இதை ஆரம்பித்தவர் கருணாநிதி தான் அவர்தான் இவற்றிற்கு வழிகாட்டி. அதற்கு முதல் தாக்குதல் முன்னாள் பிரதமர் இந்திரா, பழ.நெடுமாறன் ஆகியோர்


Devan
பிப் 23, 2025 22:11

நிலம் இல்லை பட்டா வேண்டுமா? நிலம் இல்லை மின்சாரம் வேண்டுமா?


Devan
பிப் 23, 2025 21:48

ஆற்றுவார் ஆற்றல் பணிதல். அதுசாண்றோர். மாற்றாரை மாற்றும் படை பணிவுடன்முதல்வருக்கு ஜம்பதுமனுக்கள் தேர்தலில் முதல்வர் தோல்வி அடையவில்லை


Tetra
பிப் 23, 2025 21:45

மொதல்ல‌ இவனை‌...அடிக்கணும்


Ramar P P
பிப் 23, 2025 21:14

நீங்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மும்மொழி சொல்லிக்கொடுக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு ஒழுங்காக பதில் சொல்ல தெரியவில்லை உங்கள் சின்னத்துரைக்கு.நீங்கள்லாம் வாய் பேசுறீங்க.வெட்கமாக இல்லை இப்படி பேச.