உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எஸ்.ஐ.,மீது தாக்குதல்

எஸ்.ஐ.,மீது தாக்குதல்

சிவகாசி,:விருதுநகர் மாவட்டம் சிவகாசி நியூ ஹவுசிங் போர்டு பகுதியைச்சேர்ந்தவர் ஆறுமுகம் 52. டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிந்து வரும் இவர் நேற்று முன்தினம் விஸ்வநத்தம் முனியசாமி கோயில் திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார். அங்கு இரவு 10:50 மணிக்கு கம்மவார் காலனியை சேர்ந்த மோகன்ராஜ் மது போதையில் தகாத வார்த்தை பேசி பிரச்னை செய்து கொண்டிருந்தார். ஆறுமுகம் அவரை கண்டித்தார். ஆத்திரமடைந்த மோகன்ராஜ் அவதுாறு பேசி உருட்டு கட்டையால் சிறப்பு எஸ்.ஐ.,யின் தலையில் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டார். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்