உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அவிநாசி -அத்திக்கடவு திட்டம் துவக்கம்: குன்னத்துார் ஏரியில் மலர்துாவி வரவேற்பு 

அவிநாசி -அத்திக்கடவு திட்டம் துவக்கம்: குன்னத்துார் ஏரியில் மலர்துாவி வரவேற்பு 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்கி வைக்கப்பட்டதும், குன்னத்துார் ஏரிக்கு வந்த தண்ணீரை, அமைச்சர் உள்ளிட்டோர் மலர்துாவி வரவேற்றனர்.அவிநாசி - அத்திக்கடவு திட்டம் துவக்க விழாவை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் கிறிஸ்துராஜ் உள்ளிட்டோர், திருப்பூர் மாவட்டம், குன்னத்துார் ஏரியில் தண்ணீர் நிரம்புவதை பார்வையிட்டனர். தண்ணீரில் மலர்களை துாவினர்.அமைச்சர் சாமிநாதன் கூறுகையில்,' காலிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறம், ஆண்டுக்கு, 1.50 டி.எம்.சி., உபரிநீர், வினாடிக்கு, 250 கன அடி வீதம், 70 நாட்களுக்கு, நீரேற்று முறையில், 1,085 கி.மீ., துாரம், குழாய் பதிக்கப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின், 32 ஏரிகள், ஊராட்சிகளின், 42 குளங்கள், மற்றும் 971 குளம், குட்டைகளுக்கு தண்ணீர் கிடைக்கும். மூன்று மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Murugesan S.A
ஆக 19, 2024 17:47

அவிநாசி அத்திக்கடவு தண்ணீர் குன்னத்தூர் குளத்திற்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி.. இந்தத் திட்டம் கொண்டு வர மூல காரணமானவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்தத் திட்டம் நிறைவேறுவதற்கு முன்பே இந்த குளத்தை தூய்மைப்படுத்தி இருக்கலாம் என்பதும் பொதுமக்களின் ஆதங்கம்


Murugesan S.A
ஆக 19, 2024 17:42

இந்த குன்னத்தூர் குளத்தில் முள் புதர்கள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் நிறைந்து குப்பை குளமாக ஒருபுறம் காட்சியளிக்கிறது இது சம்பந்தமாக பலமுறை சில வருடங்களாக குரல் கொடுத்தும் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு அளித்தும் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தும் பேரூராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும் எந்தப் பயனும் இல்லை.. இப்படிப்பட்ட நிலையில் அவினாசி அத்திக்கடவு தண்ணீர் ஆனது இந்த குளத்திற்கு வருவது மிக்க மகிழ்ச்சி அளித்தாலும் ஊர் புறம் தூய்மைப்படுத்தி இருக்கலாம் என்ற ஆதங்கமும் இருக்கிறது.. அதிகாரிகளுக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லையா என்ற கேள்வியும் எழுகிறது..


RAMESH
ஆக 18, 2024 11:08

ஸ்டிக்கர் ஒட்டும் திமுக....சாதனை நாயகன் எடப்பாடி......துவக்கி வைத்த அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள்....தொடர் உண்ணாவிரதம் என்று அறிக்கை...


Mr Krish Tamilnadu
ஆக 18, 2024 08:14

குளம், ஏரிகளின் பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சிகள் பார்த்து கொள்ளுமா?. நீர்வளத்துறையிடம் கையை காட்டி விட்டால், அவர்கள் தூங்கி விடுவார்கள். அடுத்த மழைக்கு தான் எழுந்திருப்பார்கள். ஏரிகள் தூர்வாரா வேண்டும். தண்ணீர் வரத்து தொடர்ச்சியாக வராததால் குளம் சேறாக மாறி விட்டது என கதை சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். மொத்த திட்டம் பாழாகி விடாமல், குளம் ஏரிகளை தயார் நிலையிலேயே பராமரிக்கவும். வெள்ள அபாயம் உண்டா?. மழை பெய்யும் போது அதிகப்படி தண்ணீர் சேர்த்து, வெளியேற வழியில்லாமல் தடுமாறுமா?. ஆரம்பம் விட, பயன்படுத்துவதில் தான் பயன்.


Kasimani Baskaran
ஆக 18, 2024 07:41

வேண்டுமென்றே மூடி வைத்து இருந்த திட்டத்தை திடீர் என்று ஆரம்பித்து முடித்து விட்டது போல காட்டிக்கொள்வது ஏமாற்று வேலை. முழுத்திட்டமும் நிறைவு பெறவில்லை என்பதை சொல்லாமல் அடுத்த தேர்தலுக்கு இது சாதனை என்று படம் கட்டப்பட வாய்ப்பு இருக்கிறது.


Kaliraja Thangamani
ஆக 18, 2024 07:14

வாழ்த்துக்கள்


கோவித்த ராசு
ஆக 18, 2024 03:55

சாதனை நாயகன் EPS


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை