| ADDED : ஆக 11, 2024 06:24 AM
விருதுநகர்: தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பாக சேவை செய்ததற்காக விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு சிறந்த கலெக்டர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆக. 15ல் சுதந்திர தின விழாவின் போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பான சேவைகளை புரிந்த கலெக்டர், மருத்துவர், வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம், அரசு சாரா தொண்டு நிறுவனம், சேவை புரிந்த சமூகப் பணியாளர், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தமிழக அரசு சார்பில் மாநில விருதுகள் வழங்குவது வழக்கம்.சென்னையில் இந்தாண்டு நடைபெறும் சுதந்திர தினவிழாவில் மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காக சிறப்பாக சேவை புரிந்த விருதுநகர் கலெக்டர் ஜெயசீலனுக்கு சிறந்த கலெக்டருக்கான விருதை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.குறிப்பாக விருதுநகர் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம், சிறப்பு குறைதீர் முகாம், நலத்திட்ட உதவிகள் செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.