உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெல் நிறுவன பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பெல் நிறுவன பொதுமேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

திருவெறும்பூர்:திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள 'பெல்' நிறுவனத்தில் ஸ்டீல் டியூப் பிரிவின் பொதுமேலாளர் சண்முகம், 50. இவர், மனைவி பார்வதி மற்றும் பி.டெக்., படிக்கும் மகளுடன், கணேஷ் நகரில் வசித்தார்.பார்வதி, பெல் மெட்ரிக்., பள்ளி ஆசிரியராக உள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்ற சண்முகம், மாலையில் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், அவரை தொடர்புகொள்ள முயன்றும் முடியவில்லை. இரவு, 1.30 மணிக்கு, அலுவலக கதவை உடைத்து பார்த்தபோது, அங்குள்ள சோபாவில், துப்பாக்கியால், அவர் தன் நெற்றில் சுட்டு தற்கொலை செய்து இறந்து கிடந்தார். பெல் போலீசார், உடலை மீட்டு விசாரிக்கின்றனர். சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், 'சண்முகத்துக்கு இதயக்கோளாறு இருந்துள்ளது. இதனால், விரக்தி அடைந்த நிலையில் இருந்த அவர், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிகிறது. அவரிடம் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் இல்லாத நிலையில், எங்கிருந்து துப்பாக்கி வாங்கினார் என விசாரிக்கிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

RADHAKRISHNAN
மார் 15, 2025 12:51

வழக்கை தங்களுக்கு பிரச்சனை வராமல் முடிக்கனும்


Tetra
மார் 14, 2025 21:38

தற்கொலை என்று எப்படி எமுதலிலேயே கண்டு பிடித்தார்கள்?


Elakkumanan Jayaraman
மார் 13, 2025 20:12

எல்லா மனிதர்களும் ஏதோ‌ ஓரு பிரச்சனையுடன் தான் வாழ்கிறோம் இதன் மூலம் என்ன‌ தெரிகிறதென்றால் மான அவமானங்களுக்கு கட்டுப்பட்டு வாழும் மனிதர்கள் தற்கொலையை தேர்ந்தெடுக்கின்றனர்.ஆனால் அரசியல்வாதிகளுக்கு சர்வசாதாரணமப்பா.


baala
மார் 14, 2025 12:41

அருமை மானம் அவமானம் பார்த்தல் லக்ஷ கணக்கான கோடிகள் எப்படி வரும்.


வாய்மையே வெல்லும்
மார் 13, 2025 11:28

இந்த பெல் "மணி " என்கிற சாவுமணி எங்கயோஊழல் பெருச்சாளியை நோக்கி அடிக்கவேண்டியது வெங்காய கோளாறு என உருட்டு.. .எவன் செஞ்ச வேலையோ ஒரு உயிர் போயிட்டு


hasan kuthoos
மார் 13, 2025 11:23

அவருக்கு உடல் பிரச்சினை, எனக்கு கடன் பிரச்சினை நிறைய உள்ளது , அவ்வப்போது எனக்கும் இந்த மாதிரி தற்கொலை க்கு மனம் தூண்டும் , இருந்தாலும் மனதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கிறேன், அவரவர் சூழ்நிலையில் இருந்து பார்த்தால் தான் அந்த வலி புரியும்.


வாய்மையே வெல்லும்
மார் 13, 2025 13:26

ஹசன் சார் நீங்க வணங்கும் கடவுள் உங்களை நன்றாக சீரும் சிறப்புடனும் வைக்கட்டும். கஷ்டநாட்கள் கடக்க இறைவனிடம் பிராத்திப்போம். உங்களின் உற்றார் உறவினர்கள் குடும்ப விடயங்களை மனதில் வைத்து பதட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும். இறைவன் உங்களுக்கு சகல வசதிகளையும் கொடுப்பார் என நான் நினைக்கிறேன்


Manalan
மார் 13, 2025 10:43

something WRONG.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை