உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெங்களூரு குற்றவாளியிடம் சென்னையில் விசாரணை 

பெங்களூரு குற்றவாளியிடம் சென்னையில் விசாரணை 

சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளியை, சென்னை அழைத்து வந்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, 'ராமேஸ்வரம் கபே' ஹோட்டலில், மார்ச் 1ம் தேதி வெடிகுண்டு வெடித்ததில், 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரணையை துவங்கினர்.ஹோட்டலில் இருந்த, 'சிசிடிவி' கேமரா வாயிலாக குண்டு வைத்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர். மங்களூரில், 2022ல், குக்கர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய, அம்மாநிலத்தின் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன், அப்துல் மதீன் தாகா ஆகியோர் தான், குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது.அவர்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தங்கியிருந்து, சதி திட்டத்தை அரங்கேற்றிய தகவலும் வெளியானது. இதனால், என்.ஐ.ஏ., அதிகாரிகள், சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களான இருவரும், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள லாட்ஜில், ஏப்., 12ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை திரட்டும் வகையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட அப்துல் மதீன் தாகாவை, என்.ஐ.ஏ., அதிகாரிகள், பெங்களூரில் இருந்து நேற்று சென்னை அழைத்து வந்தனர். திருவல்லிக்கேணியில் அவர் தங்கியிருந்த லாட்ஜிக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது.மேலும், தான் பயன்படுத்திய சிவப்பு நிற சட்டை மற்றும் சில உடமைகளை அருகில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் வைத்திருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில், அங்கேயும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சென்னையில் நேற்று பிற்பகல் 1:30 முதல் 4:00 மணி வரை விசாரணை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், அவரை மீண்டும் பெங்களூரு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை