உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரளா, ஆந்திராவில் பறவை காய்ச்சல்: ஷவர்மா சாப்பிடுவோர் உஷார்!

கேரளா, ஆந்திராவில் பறவை காய்ச்சல்: ஷவர்மா சாப்பிடுவோர் உஷார்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : கேரளா, ஆந்திராவில் பறவைக் காய்ச்ல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 'சிக்கன் ஷவர்மா' உணவு வகையை முழுமையாக வேக வைப்பதுடன், 'ஷிகெல்லா' போன்ற பாக்டீரியா இல்லாமல் முறையாக பராமரிக்க வேண்டும் என, தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தி உள்ளது.கேரளா, ஆந்திராவில் பறவைக் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே, எல்லை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.

உயிரிழப்பு

இதுவரை தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை என, மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், சிக்கன் ஷவர்மாவால் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, உணவகங்களை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, தமிழக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: கோடைக் காலத்தில் திடீரென பெய்த மழையால், தட்பவெப்ப மாற்றத்தால் ஷவர்மா உணவில், 'ஷிகெல்லா, சால்மோனெல்லா' பாக்டீரியாக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம்.இந்த வகை பாக்டீரியாக்கள் இருக்கும் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, சிக்கன் ஷவர்மா செய்வதற்கான வழிகாட்டுதல்களை முறையாக அனைத்து உணவகங்களும் பின்பற்ற வேண்டும்.இறைச்சியின் அனைத்து பகுதிகளையும், முறையாக வேக வைத்திருக்க வேண்டும். அதேபோல, அவ்வப்போது புதிதாக தான், மயோனைஸ் தயாரிக்க வேண்டும். பல மணி நேரம் தயாரித்து வைக்கப்பட்டிருந்த மயோனைஸ் பயன்படுத்தக்கூடாது.

பதப்படுத்துங்க

தற்போது, அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதால், தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எனவே, இறந்த கோழியை இறைச்சிக்காக பயன்படுத்தக்கூடாது. இறைச்சியை முறையாக பதப்படுத்த வேண்டும். எந்த வகை உணவாக இருந்தாலும் முழுமையாக இறைச்சியை வேக வைக்க வேண்டும் என, அனைத்து உணவகங்களுக்கும், அந்தந்த மாவட்ட அதிகாரிகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

cbonf
மே 10, 2024 15:16

எந்த விதமான மாமிச உணவு உண்டாலும் மனிதன் புற்று நோய்க்கு ஆளாவது நிச்சயம் மாமிச உணவை தவிர்த்து சுத்த மரக்கறி உணவையே உண்ணுங்கள்


Palanisamy Sekar
மே 10, 2024 05:32

சமூக வலைத்தளங்களில் இந்த சிக்கன் நான்வெஜி சாப்பிடுவோர் செய்கின்ற அளப்பறையில் இந்த செய்தியெல்லாம் காணாமல் போய்விடும் நாளையே உலகம் அழிந்துவிடும் என்கிற அவசரத்தில் மும்மடங்கு உணவை சாப்பிடுவதை காணொளியாக போட்டு அந்த குறிப்பிட்ட உணவகத்துக்கு செல்ல ரெக்கமென்ட் செய்வார்கள் இதற்கு பிரதிபலனாக ஓசி சோறு அன்றைக்கு அவர்களுக்கு ஸ்பான்சர் செய்வார்கள் கடைக்காரர்களும் வாயை கட்டுப்படுத்தாதவர்களுக்கு இந்த செய்தியெல்லாம் ஜுஜ்ஜுப்பி


Kasimani Baskaran
மே 10, 2024 05:24

இறந்த வகை கோழி ஷவர்மா சாப்பிடுவதை தவிர்க்கவும் - சூப்பரோ சூப்பர்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை