உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., போட்டியிட்ட 19ல் 10 தொகுதிகளில் டெபாசிட் "அவுட்"

பா.ஜ., போட்டியிட்ட 19ல் 10 தொகுதிகளில் டெபாசிட் "அவுட்"

சென்னை: தமிழகத்தில் பா.ஜ., நேரடியாக போட்டியிட்ட 19 தொகுதிகளில், வடசென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது.திமுக கூட்டணியை எதிர்த்து பா.ம.க.,, அ.ம.மு.க.,, பாரிவேந்தரின் ஐ.ஜே.கே, தேவேந்திர யாதவ்வின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி அமைத்து பா.ஜ., தேர்தலை எதிர்கொண்டது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் பா.ஜ., சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் பலா பழ சின்னத்தில் தனித்து போட்டியிட்டார். இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 21 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி கட்சிகள் களம் இறங்கின. மீதமுள்ள 19 தொகுதிகளில் பா.ஜ., நேரடியாக போட்டியிட்டது. 19 தொகுதிகள் 10 தொகுதிகளில் பா.ஜ., டெபாசிட் இழந்துள்ளது.

பா.ஜ., டெபாசிட்டை இழந்த தொகுதிகள்

1. வடசென்னை- பால்கனகராஜ், 2. சிதம்பரம்- கார்த்தியாயினி, 3. கரூர்- செந்தில்நாதன், 4. நாகை- ரமேஷ், 5. நாமக்கல்- கே.பி.ராமலிங்கம், 6. தஞ்சாவூர்- எம்.முருகானந்தம், 7. திருப்பூர்- ஏ.பி.முருகானந்தம், 8. திருவள்ளூர்- பொன்.பாலகணபதி, 9. திருவண்ணாமலை- அஸ்வத்தாமன், 10. விருதுநகர்- ராதிகா சரத்குமார்,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Shreyas
ஜூன் 06, 2024 19:09

மோடி 8 முறை தமிழ் நாட்டில் சுற்றிச் சுற்றி வந்து ஷோ காண்பித்தார்.அதன் பலனாக 11 தொகுதிகளில் டெபாசிட் காலி.இன்னும் நாலைந்து முறை ஷோ காண்பித்திருந்தால் போட்டியிட்ட மொத்த தொகுதிகளிலும் டெபாசிட் காலியாகியிருக்கும்.


konanki
ஜூன் 06, 2024 05:31

நாட்டாமையே 699 கள்ள ஓட்டு வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி என்ன கணக்கு? 5 வருஷமும் சட்டசபைக்கு பயந்து வராம ,பின்வாசல் வழியாக வந்து கையெழுத்து மட்டும் போட்டு சம்பளம், அலவன்ஸ் எல்லாம் ஆட்டைய போட்ட நாட்டாமை உலக சாதனை மறக்க முடியுமா??


konanki
ஜூன் 06, 2024 05:26

நாட்டாமை தலைமையில் கட்சி 2 ஆமாங்க 2 சீட்டு மட்டுமே 91 ல் "மாபெரும்" வெற்றி. அது எப்படி ??


Karunamoorthy KaranKalki
ஜூன் 05, 2024 23:10

கருத்துக்கள் நாகரீகமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள், வாஸ்தவம்தான். விமர்சனங்களும் நாகரீகமாக இருக்க வேண்டும். திமுக ஜெயித்தால், மது பணம் மூலம் ஜெயித்தாக விமர்சிப்பது வாக்களித்த எங்களை அவமானப் படுத்துவதாக உள்ளது.


ராது
ஜூன் 06, 2024 12:22

உண்மை கசக்கும் - நீங்க கட்சி விசுவாசி பொது மக்கள் அப்படி அல்லவே - பணம் பானம் விளையாடியதை மறக்க முயற்சிப்போம் ஜனநாயகம் பறிபோனது இவிஎம் பாஜகவுக்கு மட்டும் வோட்டு போட்டது என்று கதறும் எதிர்கட்சிகள் இன்று வாய் மூடி மௌனவிப்பது


Ramesh Sargam
ஜூன் 05, 2024 20:27

திராவிட மாயையில் இருந்து தமிழக மக்கள் விடுபடவில்லை என்பதைத்தான் இது தெரிவிக்கிறது.


Ayyavu Uthirasamy
ஜூன் 05, 2024 19:35

10 தொகுதி தானா? நான் இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். ???


Narayanan Muthu
ஜூன் 05, 2024 18:42

தேர்தல் பத்திர ஊழல் மூலம் கொழுத்த பணத்தில் தேர்தல் செலவுக்கு கொடுத்த தொகையை வேட்பாளர்கள் மொத்தமாக ஆட்டையை போட்டால் எப்படி வாய்ப்பு தொகை திரும்ப கிடைக்கும். நோட்டாவை வென்றதே தமிழக பாஜகவுக்கு பெரும் சாதனைதான்.


ராது
ஜூன் 06, 2024 12:24

பாவம் பாப்பா திமுக தொண்டர்கள் பணத்தை மட்டும் வாங்கி தேர்தலை கவனித்ததோ - கூட்டு களவானிகள் அரசியல்வாதிகள்


MADHAVAN
ஜூன் 05, 2024 17:57

அந்த அஸ்வத்தாமன் என்ற மூடன் பேசுனப்பேச்சுக்கு இந்த பரிசு பொருத்தமானதுதான்,


ramesh
ஜூன் 05, 2024 17:11

பிஜேபி தமிழ் நாட்டில் படு தோல்வி அடைந்த பிறகும் உண்மையை ஒத்து கொள்ள மாட்டீர்கள். உண்மையில் உங்கள் அரசியல் அரிச்சுவடி கூட தெரியாத அண்ணாமலையின் ஆணவத்தால் தான் பிஜேபி தோற்றது .இடப்பாடி உடன் ஒழுங்காக சேர்ந்து இருந்து இருந்தால் ஒரு பதினைந்து சீட் ஆவது கூட்டணிக்கு கிடைத்து இருக்கும் .


Sankar Ramu
ஜூன் 05, 2024 17:02

கர்ம வீர்ர் காமராஜரையே தோற்க்கடித்த தமிழன். பணம் பத்தும் செய்ம்யும்னு சும்மாவா சொன்னாங்க?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ