உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., அ.தி.மு.க., கொள்கை ரீதியாக பிரியவில்லை: திருமாமளவன்

பா.ஜ., அ.தி.மு.க., கொள்கை ரீதியாக பிரியவில்லை: திருமாமளவன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு:பா.ஜ., - அ.தி.மு.க., கொள்கை ரீதியாக பிரிந்து செல்லவில்லை. ஒரு அந்தரங்க உடன்பாட்டின் அடிப்படையில் தான் பிரிந்து இருப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர் நாளையே அ.தி.மு.க.,வில் சிலர் வெற்றி பெற்றாலும், பா.ஜ.,வுக்கு ஆதரவு தருவர். எனவே, பா.ஜ., ஆட்சி அமைவதை தடுக்க வேண்டும் என்பது, ஜனநாயகத்தின் கடமையாக இருக்கிறது.'நாளை நமதே; 40ம் நமதே' என்று, இவங்க கூட்டணி தலைவர் ஸ்டாலின் சொல்றார்... இவர், அ.தி.மு.க.,வினர் சிலர் வெற்றி பெற்றால்னு இழுக்கிறாரே... 100சதவீத வெற்றியில் இவருக்கு நம்பிக்கை இல்லையோ?தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் 2014-ம் ஆண்டில், 609வது இடத்தில் இருந்த அதானி, இன்றைக்கு 13-வது இடத்தில் உயர்வதற்கு யார் காரணம்? பிரதமர் மோடி ஆட்சியால் கார்ப்பரேட்டுகள் பயனடைந்தனர். தேர்தல் பத்திர நன்கொடை ஊழல் வாயிலாக, 6,572 கோடி ரூபாய் குவித்த பிரதமர் மோடி, ஊழலை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.அதே தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, இவரது காங்., கட்சியும் 1,000 கோடிக்கு மேல வசூல் பண்ணியிருக்குதே... அதுவும் ஊழல் கட்சின்னு ஒப்புக்குறாரா?அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: கொரோனா காலத்தில், ஆந்திரா, தெலுங்கானா அரசுகள், அரசு ஊழியர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுத்தன. கேரள அரசு, மாதா மாதம் ஒரு வார சம்பளத் தொகையை பிடித்தம் செய்தது. ஆனால், ஆண்டு முழுதும் அந்த கால கட்டத்தில் அரசு அலுவலர்களுக்கும், பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும், முழு சம்பளம் கொடுத்தது, பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க., அரசு மட்டுமே.அப்படி வாரி வாரி கொடுத்து தான், அரசு கஜானாவை காலி பண்ணிட்டு போயிட்டீங்க... இப்ப, அரசு ஊழியர்களுக்கு எந்த சலுகையும் தர முடியாம தி.மு.க., அரசு தவிக்குது!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் பேச்சு: பிள்ளையார்பட்டி சென்று கற்பக மூர்த்தியாரை கைகூப்பி வணங்கிவிட்டு வெளியில் வந்தபோது, கண் குளிர கண்டேன். குளம் எங்கும் தண்ணீரே தெரியாத அளவுக்கு, தாமரை மலர்ந்திருந்தது. ஆம் பிள்ளையார் விரும்புவதை, சிவகங்கை சீமையில் பிசகாமல் செய்து முடிப்போம்.குளத்துல வேணும்னா தாமரைகள் மலரலாம்... தேர்தல் களத்தில் மலருமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Stalin Chellaswamy
ஏப் 05, 2024 18:26

Thirumavalan seems to have lost completely, what do you mean by this question? reach out undefined information what you have done and what you are going to do in case if you win,


GANESUN
ஏப் 05, 2024 11:46

கோவில் கோவிலா போயிட்டு சனாதன தர்மத்த்தை பிரியாமல், கிருத்துவர்களையும், முஸ்லிம்களையும் ஏமாத்திட்டு திரிகிறாய் இதயற்காகவே ஈசனும், ஏசுவும் அல்லாஹ்வும் சேர்ந்து தண்டனை தருவார்கள்


Ravi G R
ஏப் 05, 2024 10:17

Thiruma, டூ you have any policy or philosophy on your own டூ you have the guts to voice against corrupt DMK? Stop commenting about AIADMK/ BJP


vijay s
ஏப் 05, 2024 10:15

அமைவதை தடுக்க வேண்டும்


samvijayv
ஏப் 05, 2024 09:58

அவர்கள் கொள்கை ரீதியாக பிரியவில்லை சரி, நீங்கள் எந்த கொள்கையின் அடிப்படையில் கொத்துக் கொத்தாக தமிழ் இனத்தை கொன்று குவித்த ஈவு இறக்க மின்றி ராஜபக்ஷேவிடம் கைகுலுக்கிக் கொண்டு புன்னகையுடன் படம் எடுத்துக் கொண்டீர்களே?


V. Kanagaraj
ஏப் 05, 2024 09:42

திமுக பிஜேபியை ஒரு போதும் ஆதரிக்காது என்று உங்களால் சான்றளிக்க முடியமா


Anbuselvan
ஏப் 05, 2024 09:29

ஈ.வெ.ரா.,வின் வாரிசு என கூறி கொண்டு தேர்தலுக்காக பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டவர் கொள்கையை பற்றி பேச கூடாது


vijai
ஏப் 05, 2024 08:12

இவருக்கு என்ன கொள்கை? எவன் நாலு சீட்டு தந்தாலும் அந்த கட்சியில் கூட கூட்டணி சேர்ந்து விடுவார்


பேசும் தமிழன்
ஏப் 05, 2024 07:57

நீங்கள் சொல்வதில் கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே.... யாராவது பிரிந்து தேர்தலில் நின்றால் வெற்றி பெறலாம் என்று நினைப்பார்களா..... அப்படியென்றால் நீங்களும் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்து தேர்தலில் நிற்கலாமே.... நீங்கள் அல்லது திமுக... யார் வெற்றி பெற்றாலும் பிஜெபி க்கு எதிர்ப்பு தானே..... கேட்பவன் கேனயன் என்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்று கூறுவீர்களா ???


J.V. Iyer
ஏப் 05, 2024 06:13

ஐந்து வருடமாக மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்று சொல்லி வோட்டு கேட்பதை விட்டுவிட்டு , மக்களைத் திசை திருப்பவேண்டாம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை