உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள் விற்பதே பா.ஜ., தான்

போதைப்பொருள் விற்பதே பா.ஜ., தான்

சேலம்:தமிழக மேற்கு மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை சேலத்தில் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.முன்னதாக அவர் அளித்த பேட்டி:நடந்து முடிந்த,நான்கு கட்ட தேர்தலில், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசிய மோடி, அமித்ஷா, தற்போது தோல்வி அச்சத்தில், 'இஸ்லாமியர்கள் குறித்து எப்போது பேசினேன்' என, கேள்வி எழுப்புகின்றனர்.ஓட்டு வங்கிக்கு சுயரூபத்தை மறைத்து இருவரும் உண்மைக்கு புறம்பாக பேசி வருகின்றனர். எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் மோடிக்கு யாரும் ஓட்டுப்போட மாட்டார்கள். பிரிவினைவாத அரசியலை மோடி பேசவில்லை எனில், அவருக்கு எதிராக, நாங்கள் ஏன் நீதிமன்றத்தை நாடுகிறோம்.லோக்சபா தேர்தலில், 'இண்டியா' கூட்டணி, 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். நாட்டில் போதைப்பொருள் விற்பதே, பா.ஜ.,தான். ஜெயக்குமார் மரணம் குறித்த பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. போலீசார், உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ