உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாராயத்தால் ஏற்படும் பார்வையிழப்பு, உள்ளுறுப்பு பாதிப்பு நிரந்தரமாகி விடும்

சாராயத்தால் ஏற்படும் பார்வையிழப்பு, உள்ளுறுப்பு பாதிப்பு நிரந்தரமாகி விடும்

சென்னை : ''கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட பார்வையிழப்பு மற்றும் உள்ளுறுப்பு பாதிப்பு, சிகிச்சையில் உயிர் பிழைத்தாலும் நிரந்தரமானதாக இருக்கும்,'' என, அரசு பொதுநல டாக்டர் அ.ப.பரூக் அப்துல்லா கூறினார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பலருக்கு, கண்பார்வை இழப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, அரசு பொதுநல டாக்டர் அ.ப.பரூக் அப்துல்லா கூறியதாவது: அரசு தரப்பில் விற்பனை செய்யப்படும் மது, தர பரிசோதனைகளுக்கு உட்பட்டு விற்பனை செய்யப்படும். சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தில், அதை எதிர்பார்க்க முடியாது. சாராயம் காய்ச்ச, 'பேட்டரி' போன்ற பல்வேறு வகையான பொருட்கள் சேர்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சாராயத்தின் கொதிநிலையில், 'மெத்தனால்' உருவாகும். அதை முறையாக பில்டர் செய்யும் பட்சத்தில், அதன் அளவை குறைக்க முடியும். அவ்வாறு பில்டர் செய்யாதபட்சத்தில், மெத்தனால் என்ற எரிசாராயம் அளவுக்கு அதிகமாக உருவாகியிருக்கக் கூடும்.இதை பருகும்போது, மெத்தனால் ரத்தத்தில், 'பார்மால்டிைஹடு' ஆக மாறி, பின், 'பார்மிக்' அமிலமாக மாறி விடுகிறது. பார்மிக் அமிலம் என்பது சிவப்பு எறும்புகள் கொட்டும் போது நமக்குள் செலுத்தும் அமிலமாகும். பார்மால்டிஹைடு என்பது இறந்தவர்களின் உடல் கெடாமல் இருக்க, எம்பார்மிங் செய்ய உபயோகிக்கும் திரவம்.கள்ளச்சாராயத்தை அருந்தியோர், 12 முதல் 24 மணி நேரத்திற்கு வரை சாதாரணமாகவே இருப்பர். அதன்பின் தான், வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், பிதற்றல் நிலை, கண்பார்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். அதற்குள் சிகிச்சை பெறாவிட்டால், நிரந்தரமாக கண்பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் பாதிப்பு, பார்கின்சன் போன்ற நரம்பு மண்டல பாதிப்பு, நடுக்கம், நடை தளர்வு ஏற்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தும்.சிகிச்சையில் உயிர் பிழைத்தாலும், நிரந்தர கண்பார்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்பு, உள்ளுறுப்பு பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Balakrishnan Kamesh
ஜூன் 21, 2024 15:23

டாஸ்மாக்கில் குவார்ட்டர் விலை இருநூறு ருபையும் தாண்டி விட்டது ... நூறு ரூபாய்க்கு தினமும் குடித்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த கடுமையான விலைவாசி உயர்வால் ... அறுபது ரூபாய்க்கு விற்கப்படும் கள்ள சாராயத்திற்கு திசை மாறினார்கள் ... குடி குடியை கெடுக்கும் என கோடி முறை கூவினாலும் ..அது விற்பனையில் உள்ளதால் குடிப்பதை நிறுத்த மாட்டார்கள் .. இது பெரிதாக பேசப்பட்டு மறக்கப்பட்டு மறுபடியும் தொடரும் ...


nizamudin
ஜூன் 21, 2024 15:16

நடிகர் விஜய் ஆறுதல் கூறினார் /மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் நீங்கள் பாடல் வெளீயீடு விழா மற்றும் எந்த நிகழ்ச்சிக்கும் இடம் தராமல் படங்களை நேரடியா திரை இட முயற்சி செய்யுங்கள் /காவல் துறையினர் கஷ்டங்கள் ரசிகர்கள் குறிப்பாக வீடு திரும்பும் பெண்கள் பொது மக்கள் அடையும் தொல்லைகள் கொஞ்ச நெஞ்ச மெல்ல mGR மஃர் சிவாஜி சாதிக்கத்தை யாராலும் சாதிக்க /அவர்கள் இருவரும் யாருக்கும் தொல்லை தராமல் படங்களை ணறடியாக வெளியிட்டார்கள் /பத்து நாள் ஓடினாள் பாராட்டு விழா எல்லாம் தவிர்க்க /yerkanavey /ஏற்கனவேய சென்னை டிராபிக் ல் மிதக்கிறது


nizamudin
ஜூன் 21, 2024 14:49

அரசு மக்கள் நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும் / பாராட்டு விழாக்கள் பிறந்த நாள் விழாக்கள் கருத்தரங்குகள் தடை SEITHU காவல் துறையினரை மக்களை பாத்து காக்கும் பணியில் ஈடு படுத்த வேண்டும்


nizamudin
ஜூன் 21, 2024 14:45

மத ரீதியாக மது குடிப்பதை தடை செய்யவேண்டும் மத்திய அரசு நாடு முழுவதும் மது விலக்கை கட்டாய படுத்தி உயிர்களை காப்பாற்ற உதவ வேண்டும்


AMBROSE SANTHASEELAN L
ஜூன் 21, 2024 11:31

மக்களே ஏன் குடிக்கு அடிமையாகுகின்றீா்கள். அறிவுள்ள மனிதன் யாரும் குடிக்கு அடிமையாக மாட்டான். மக்கள் யாரும் குடிக்கவில்லையென்றால் எப்படி டாஸ்மாக இயங்கும். மக்களே சிந்தியுங்கள்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 21, 2024 10:44

அது மெத்தனாலின் சைட் எஃபெக்ட்.. ஆனா எது எப்படியோ பாஜகவை உள்ளே வர விடமாட்டோம்.. கண்ணைப் பறி கொடுத்தாவது தடுப்போம் .....


Guruvayur Mukundan
ஜூன் 21, 2024 09:49

Excellent Comment.


கூமூட்டை
ஜூன் 21, 2024 09:49

சாராய வியாபாரிகள் வணிகம் செய்பவர்கள் சொத்து பறிமுதல் செய்து அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க வேண்டும்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 21, 2024 13:27

நோ .... நோ ..... உங்க தந்தை வீட்டுப்பணமா, மக்களின்வரிப்பணம் தானே ன்னு நிம்மி மேடத்தைக் கேட்போம் ......ஆனா அதைத்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்போம் .......


Ramarajpd
ஜூன் 21, 2024 09:42

சாராயம் காய்ச்சும் போது தெளிவாக இருக்க வேண்டும். இல்லை எனில் எப்பவாவது பேட்டரியை அதிகமாகப் போட்டு விடுவார்கள். அது சில உயிர்களை பறித்து விடும். சாராயம் காய்ச்சுவது ஒரு கலை.


valli ravi
ஜூன் 21, 2024 09:32

டாஸ்மாக் இருக்கும் போதே இந்த நிலைமை மதுவிலக்கு வந்தால் நினைத்து பார்க்கமுடியவில்லை .கள்ளக்குறிச்சியில் வேலை பார்த்த மதுவிலக்கு காவலர்கள் அனைவரும் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள் இவர்களின் சொத்து விவரங்களை அரசு உடனே விசாரிக்கவேண்டும் கட்சி காரர்கள் உட்பட .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை