மேலும் செய்திகள்
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
15 minutes ago
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
7 hour(s) ago | 5
சென்னை : 'சுயநிதி முறையில், எட்டு இடங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட பணிகளை, 2026க்குள் முடிக்க வேண்டும்' என, வீட்டுவசதி வாரியம் கெடு விதித்து உள்ளது.தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், வீட்டுவசதி வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளாக சுயநிதி முறையிலான குடியிருப்பு திட்டங்களே அதிகம் கட்டப்படுகின்றன. இத்திட்டங்களில் வீடுகளை பெற மக்கள் ஆர்வம் காட்டாததால், குலுக்கல் இன்றி முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், வீடுகள் ஒதுக்கப்படுகின்றன. கடந்த, 2021க்கு பின் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில், கட்டுமான பணிகள் எதிர்பார்த்த வேகத்தில் நடக்கவில்லை. ஒப்பந்ததாரர்கள் நிலையில் ஏற்பட்ட தொய்வு தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து, வாரிய உயரதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.இதுபற்றி, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருச்சி மாவட்டங்களில், எட்டு இடங்களில், 2,385 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில், 886 கோடி ரூபாயில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.இந்த பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடித்து, பணம் செலுத்தியவர்களுக்கு வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதனால், 2026க்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
15 minutes ago
7 hour(s) ago | 5