உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.60,000 கோடியாக உயர்வு?

பத்திரப்பதிவு வருவாய் இலக்கு ரூ.60,000 கோடியாக உயர்வு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பத்திரப்பதிவு வாயிலான வருவாயை, 60,000 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற உயரதிகாரி உத்தரவால், சார் - பதிவாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். தமிழகத்தில் பத்திரப்பதிவு வாயிலாக ஆண்டுக்கு, 12,000 கோடி முதல், 17,000 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டப்படுகிறது. இதன்படி, 2023 - 24ம் நிதியாண்டிற்கு, 20,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. பத்திரப்பதிவு பணிகளை விரைவுபடுத்துதல்; வழிகாட்டி மதிப்பு பிரச்னையை முடித்து, நிலுவை பத்திரங்களை பதிவு செய்வது என, வருவாய் இலக்கை அடைய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும், 18,000 கோடி ரூபாய் அளவிற்கே வருவாய் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பதிவுத்துறையின் பொறுப்பு செயலராக, வணிக வரித்துறை ஆணையர் ஜெகநாதன் சமீபத்தில் பொறுப்பேற்றார். துறையின் பணிகளை ஆய்வு செய்த அவர், வருவாய் இலக்கு தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள், சார் - பதிவாளர்களை அலறவிட்டுள்ளது. இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: சந்தை நிலவரப்படி ரியல் எஸ்டேட் துறையில், வர்த்தக மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களின் கணக்கெடுப்பு அறிக்கைகள் அடிப்படையில், தமிழக ரியல் எஸ்டேட் வர்த்தக மதிப்பு, 10 ஆண்டுகளில், 300 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனாலும், பத்திரப்பதிவு வருவாய், 10 ஆண்டுகளில், இரு மடங்காக கூட உயராதது ஏன் என, பதிவுத்துறையின் பொறுப்பு செயலர் கேள்வி எழுப்பி உள்ளார். இதன்படி, பதிவுத்துறையின் வருவாய் இலக்கு, 60,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும் என்கிறார். இதற்காக நில வழிகாட்டி மதிப்புகளை உயர்த்துவதற்கான பரிந்துரைகள் அனுப்ப, சார் - பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

venugopal s
மே 06, 2024 13:26

இருபதாயிரம் கோடி வருவாயை ஒரே வருடத்தில் அறுபதாயிரம் கோடியாக மாற்ற எந்த அரசாலும் முடியாது. எனவே இது நிச்சயமாக உண்மை செய்தியாக இருக்க முடியாது.


lana
மே 06, 2024 11:38

இது பரவாயில்லை. இதை விட கொடுமை மாநில அரசின் வணிகவரித்துறை என்னும் gst துறையில் நடக்கிறது. அந்த துறையில் கடந்த 2 ஆண்டுகள் ஆகவே இலக்கு முந்தைய ஆண்டை விட சுமார் 40 சதவீதம் அதிகம் நிர்ணயம் செய்ய பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 % பின் வரி இலக்கு மட்டும் எப்படி 40% அதிகம். இவை அனைத்தும் மாநில அரசு செய்து விட்டு gst மத்திய அரசு அதிகம் என்று நாடகம் ஆடுகிறார்கள்


Sivak
மே 06, 2024 11:12

இது என்ன மக்கள் அரசா இல்ல கந்து வட்டி கடையா இல்ல கார்பொரேட் கம்பெனியா ??? இலக்கு நிர்ணயிப்பதற்கு?? திமுக திருட்டு கூட்டம் பின்புலம் இருக்கும்


Ravi Varadarajan
மே 06, 2024 06:25

அரசு மக்களிடம் இருந்து நிலங்களை அரசு நிச்சயித்த மதிப்பில் வாங்கி கொள்ள வேண்டும் உதாரணம் திநகர் பழைய பிளாட்டுகளை ரூபாய் சதுர அடி என்ற மதிப்பில் அரசு வாங்கி கொள்ள வேண்டும்


Dharmavaan
மே 06, 2024 06:19

ஏன் என்பதை அரசு ஆராய வேண்டும் கண்மூடித்தனமாக உயர்த்துவது சரியில்லை பொது மக்களுக்கு பாதிப்பு


Kasimani Baskaran
மே 06, 2024 05:40

பட்டப்பகலில் பெருங்கொள்ளை என்றால் அது பத்திரப்பதிவுத்துறைதான் நிலத்தின் உண்மை மதிப்பில் பரிவர்த்தணைகள் செய்தால் இன்னும் பத்து மடங்கு வரி வரும் கறுப்புப்பணத்தை உருவாக்கும் ஒரு சிறப்பான துறை என்றுதான் சொல்ல வேண்டும் பத்திரப்பதிவுக்கட்டணம் ஞாயமானதாக இருக்க வேண்டும், அது மட்டுமல்ல புல்லுருவிகள் லஞ்சம் வாங்குவதையும் கூட தடுக்க வேண்டும் இல்லை என்றால் தமிழக அரசுக்கு வரும் வருமானம் நின்று போகும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை