உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனுமதியின்றி சுவர் விளம்பரம் காஞ்சியில் போட்டா போட்டி

அனுமதியின்றி சுவர் விளம்பரம் காஞ்சியில் போட்டா போட்டி

காஞ்சிபுரம், தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ல் நடக்கிறது. தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான மார்ச் 16ல் இருந்தே, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதியில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. நகராட்சி, பேரூராட்சிகளில் சுவர் விளம்பரம் எழுத, தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.இருப்பினும், ஊராட்சி பகுதிகளில், வீட்டின் உரிமையாளரின் அனுமதியை பெற்று, தொகுதிக்கான தேர்தல் நடத்தும்அலுவலரிடம் விண்ணப்பித்து சுவர் விளம்பரம் எழுத தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில், காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரி குப்பம் ஊராட்சி, மின் நகரில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தங்களது கட்சிசின்னங்களை சுவர் விளம்பரமாக எழுதியுள்ளனர்.இதில், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்ற அனுமதி எண் எழுதப் படவில்லை. இரு கட்சியினரும் தேர்தல் நடத்தை விதியை மதிக்காமல், போட்டா போட்டியாக, மின் நகரில் சுவர் விளம்பரம் எழுதி வருகின்றனர்.இதனால், காஞ்சியில் கிராமப்புற பகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்