உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிறுமிகளுடன் சுற்றிய சிறுவர்கள் டி.எஸ்.பி.,யின் நுாதன தண்டனை

சிறுமிகளுடன் சுற்றிய சிறுவர்கள் டி.எஸ்.பி.,யின் நுாதன தண்டனை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் சிறுமிகளுடன் சுற்றித்திரிந்த சென்னை சிறுவர்களை பிடித்த டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், அவர்களுக்கு நுாதன தண்டனை வழங்கினார்.விருத்தாசலம் செராமிக் தொழிற்பேட்டை வளாகத்தில், நேற்று பகல் 2:00 மணியளவில், 15 முதல் 16 வயதுடைய சிறுவர், சிறுமியர் நால்வர் சுற்றித்திரிந்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி., ஆரோக்யராஜ் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர்.அவர்களை டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், நால்வரும், சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறியதும் தெரிய வந்தது.மேலும், சிறுவர்களின் ஹேர் ஸ்டைலில் வித்தியாசமாக இருந்தனர். உடன், சலுான்கடை ஊழியரை வரவழைத்த போலீசார், அவர்களுக்கு முடிதிருத்தம் செய்தனர். மேலும், நால்வருக்கும் அறிவுரை கூறிய டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ