உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்

தேனி மாவட்டம் வருஷநாடு தங்கம்மாள்புரம் ஊராட்சி பச்சையப்பாபுரம் செங்கல் சூளை உரிமையாளர் அழகுமுத்து 43, டூவீலர் விபத்தில் காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் அவரது உடலின் இதயம், கண்கள், கல்லீரல், கணையம், சிறுநீரகம் தானமாக வழங்க ஒப்புக்கொண்டனர். உறுப்பு தானத்திற்கு பின் அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது, முன்னதாக பெரியகுளம் ஆர்.டி.ஓ., முத்துமாதவன், மூளைச்சாவு அடைந்த அழகுமுத்துவின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தார்.. பின் இறுதி சடங்குகள் நிறைவேற்றிய குடும்பத்தினர் நல்லடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ