உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் தவறான தகவலை கூறலாமா? சீர்மரபினர் சமுதாயத்தினர் கொந்தளிப்பு!

முதல்வர் தவறான தகவலை கூறலாமா? சீர்மரபினர் சமுதாயத்தினர் கொந்தளிப்பு!

சென்னை:'அரசாணை வெளியிடப்படாத நிலையில், அரசாணை வெளியிட்டுள்ளதாக முதல்வர் தவறான தகவலை பிரசாரத்தின் போது கூறுவது சரியா' என, சீர்மரபினர் சமுதாயத்தினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில், நேற்று முன்தினம் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது, 'கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், இந்தப் பகுதிக்கு வந்தபோது, சீர்மரபின மக்கள் என்னிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தனர். தங்களுக்கு, டி.என்.சி., - டி.என்.டி., என, இரு விதமான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 'இவை பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றன என்றனர். இந்த குழப்பத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தேன்.'அதன்படியே, அந்த இரட்டை சான்றிதழ் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். இனி, ஒற்றை சான்றிதழ் பெற்றால் போதும் என்று உத்தரவிட்டு, அரசாணையும் வெளியிடப்பட்டது. 'சொன்னதை செய்து விட்டுத் தான், உங்கள் முன்னால் வந்து தெம்போடு, துணிவோடு நிற்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு இந்த ஒற்றை சான்றிதழ் வழிவகுக்கும்' என, முதல்வர் பேசினார்.முதல்வர் ஒற்றை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டது உண்மை. ஆனால், இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால், அதிருப்தியில் உள்ள சீர்மரபினர் சமுதாய மக்கள், பிரசாரத்தில் முதல்வர் தவறான தகவலை கூறலாமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.விளக்கத்தை சொல்லுங்க!''இதுவரை டி.என்.டி., என, ஒற்றை சான்றிதழ் வழங்க, அரசாணை வெளியிடப்படவில்லை. இது, முதல்வருக்கு தெரியுமா என்றும் தெரியவில்லை. அரசாணை வெளியிடாமலே, அரசாணை வெளியிட்டுள்ளதாக, அதிகாரிகள் முதல்வருக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளனரா என்பதும் தெரியவில்லை. முதல்வர் பேச்சால், சீர்மரபினர் சமுதாயத்தினர் குழப்பத்தில் உள்ளனர். நேற்று மதியம் வரை அரசாணை வெளியாகவில்லை. இதற்கு முதல்வர் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.- துரைமணி, ஒருங்கிணைப்பாளர்,தமிழ்நாடு சீர்மரபினர் நல சங்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி