உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நயினார் நாகேந்திரனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை:திருநெல்வேலி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழக்கு மற்றும் சொத்து விபரங்களை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்ததாகவும், மனுவை மறுபரிசீலனை செய்ய உத்தரவிடக் கோரியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த மனு:திருநெல்வேலி லோக்சபா தொகுதி, பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக, சட்ட விரோதமாக தடுத்து வைத்தல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளில் நாங்குநேரி போலீசில் 2023ல் வழக்கு பதியப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் அசையும், அசையா சொத்துக்கள் உள்ளன. இவற்றை வேட்பு மனுவில் குறிப்பிடாமல் மறைத்துள்ளார்.முறையாக விசாரிக்காமல் அவரது வேட்பு மனுவை திருநெல்வேலி தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டதில் விதிமீறல் உள்ளது. ஆட்சேபனையை பரிசீலிக்க தேர்தல் அலுவலருக்கு மனு அனுப்பினேன். விசாரிக்க வேண்டும். வேட்பு மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேட்பு மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேட்புமனு தொடர்பாக விசாரணை முடிவடையும் வரை, அத்தொகுதியில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பான வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும். இம்மனு அங்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரிக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ