உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மத்திய அரசின் நோக்கம் சரி: மாணவர்களின் துயரம்: அன்புமணி கவலை

மத்திய அரசின் நோக்கம் சரி: மாணவர்களின் துயரம்: அன்புமணி கவலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மத்திய அரசின் நோக்கம் சரியாக இருந்தாலும் மாணவர்களின் துயரம் விவரிக்க முடியாதது' என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யுங்கள். இந்தியா முழுவதும் இன்று நடைபெறவிருந்த முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்களின் நலனையும், மனநிலையையும் சிறிதும் உணர்ந்து கொள்ளாமல் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது.நீட் தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வு நடத்தும் முறை வலிமையாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்வதற்காகவே நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் நோக்கம் சரியானதாக இருக்கலாம், ஆனால் இந்த முடிவால் மாணவர்கள் அனுபவித்த துயரமும், அவதியும் விவரிக்க முடியாதவை.குறைந்தபட்சம் நீட் தேர்வை ஒத்தி வைக்கும் முடிவை 3 நாட்களுக்கு முன்னதாக எடுத்திருந்தால் கூட இந்த மன உளைச்சலை தவிர்த்திருக்கலாம். நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது முதலே அதில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் அதை போக்க முடியவில்லை. எனவே நீட் தேர்வு சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kirubanithi
ஜூன் 23, 2024 17:44

பரவலான மாநில பிரதிநிதித்துவம் இல்லாத என் டி. ஏ நிர்வாகம் மிகப்பெரிய ஜனநாயக இலக்கணப்பிழை


Apposthalan samlin
ஜூன் 23, 2024 16:36

நீட் தேர்வு தேவை இல்லாத ஆணி


Sundar R
ஜூன் 23, 2024 14:37

யாராவது நீட் தேர்வு வேண்டாம் என்று சொன்னால் அவருக்கு தமிழகத்தில் சொந்தமாக மருத்துவக் கல்லூரி உள்ளது என்று அர்த்தம்.


saravana ramanathan
ஜூன் 23, 2024 13:02

முற்றிலும் சரி. பல மாணவர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கிளம்பி சென்று இருப்பார்கள். தேவையற்ற பொருளாதார இழப்பு மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பர். மத்திய அரசின் முடிவில் தவறில்லை. ஆனால், அதை அறிவித்த நேரம் தவறு.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ