உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.எஸ்., டேட்டா சயின்ஸ் மாணவர்களுக்கு சான்றிதழ்

பி.எஸ்., டேட்டா சயின்ஸ் மாணவர்களுக்கு சான்றிதழ்

சென்னை:சென்னை ஐ.ஐ.டி.,யில், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் முடித்த, 177 பேர் பட்டம் பெற்றுள்ளனர்.உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான சென்னை ஐ.ஐ.டி., சார்பில், 'ஆன்லைன்' வழியில் நடத்தப்படும், பி.எஸ்., டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஐ.ஐ.டி., வளாகத்தில், 30ம் தேதி நடந்தது.இதில், 10 பேர் பி.எஸ்., பட்டப்படிப்பு சான்றிதழ்கள் பெற்றனர். மேலும், 167 மாணவர்கள், டிப்ளமா சான்றிதழ்கள் பெற்றனர். தற்போதைய நிலையில், 29,000 மாணவர்கள், பி.எஸ்., ஆன்லைன் படிப்பில் சேர்ந்துள்ளனர் என்றும், புதிய கல்வி ஆண்டு படிப்புக்கு, 25,000 பேர் விண்ணப்பித்து உள்ளதாகவும், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்தார்.மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன சி.இ.ஓ., நளினிகாந்த், சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆண்ட்ரூ தங்கராஜ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை