உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில்வே செயலியில் மாற்றம்: பயணியர் வரவேற்பு

ரயில்வே செயலியில் மாற்றம்: பயணியர் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட் எடுக்கும் யூடிஎஸ் செயலியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால் நடைமேடை, ரயில் டிக்கெட்டுகளை எளிதில் பெற முடியும். இதற்கு பயணியர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டை பெற டிக்கெட் கவுன்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில் 'யூடிஎஸ்' என்ற மொபைல் போன் செயலி பயன்பாட்டில் உள்ளது.இதன் வாயிலாக முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் போன்றவற்றை பெற முடியும். இருப்பினும் அனைத்து இடங்களில் இருந்தும் இந்த செயலியை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. ஏனெனில் வெளிப்பகுதியில் இருந்து டிக்கெட் பதிவு செய்வதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. இந்த கட்டுப்பாட்டு எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.இதன் காரணமாக யூடிஎஸ் செயலி வாயிலாக ரயில் நிலையத்தின் அருகே அல்லது வீட்டில் இருந்தே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.ஆனால் டிக்கெட் எடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்து விட வேண்டும். மேலும், ரயில் நிலையத்தின் உள்பகுதியில் டிக்கெட் எடுக்க முடியாது.இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வெளிப்பகுதியில் யூடிஎஸ் செயலி வாயிலாக புறநகர் ரயில் டிக்கெட் பதிவு செய்வதில் ஜியோ பென்சிங் கட்டுப்பாடுகள் இருந்தன. இப்போது, இந்த கட்டுப்பாடுகளை ரயில்வே நீக்கியுள்ளது. இதன் வாயிலாக முன்பதிவில்லாத டிக்கெட், புறநகர் ரயில் டிக்கெட் மற்றும் நடைமேடை டிக்கெட் ஆகியவற்றை செயலி வாயிலாக வீட்டில் இருந்தபடியே எடுத்துக் கொள்ள முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

R Hariharan
ஏப் 26, 2024 07:23

இது கவனிக்க பட வேண்டியது பல முறை எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கு அதயும் ஸ்லீப்பர் கோச்சில் மிகையாம் அதிகம் ஆனால் இந்த பிரச்னை தென்னகத்தில் இல்லை பம்பாய், கொல்கத்தா, ஹைதெராபாத் போன்ற வடக்கு நோக்கி செல்லும் ரயில்களில் இந்த பிரச்னை irukku


S.Murugesan
ஏப் 26, 2024 05:38

பகல் நேரங்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாதவர்களும் ஏறிக்கொண்டு அசௌகரியம் கொடுக்கின்றனர் டிக்கெட் பரிசோதகர் முன்பதிவு செய்தவர்களை மட்டும் பரிசோதித்து செல்கின்றனர் இதனால் துறைக்கு நட்டம் பயணிகளுக்கு அசௌகரியம் நிர்வாகம் கவனித்து பரிசோதகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ