உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லணும்!: தமிழிசை சவுந்திரராஜன்

கிருஷ்ண ஜெயந்தி விழாவுக்கு முதல்வர் வாழ்த்து சொல்லணும்!: தமிழிசை சவுந்திரராஜன்

ஆன்மிகம் குறித்து பேசாதவர்கள், சனாதனத்தை எதிர்த்தவர்கள் எல்லாம், இன்று முருகனுக்கு மாநாடு நடத்த வேண்டி இருக்கிறது. இது தான், பா.ஜ., பெற்றுள்ள முதல் வெற்றி. ஈ.வெ.ரா., என்று கூறிக் கொண்டிருந்தவர்களை, முருகா எனக்கூற வைத்திருப்பது, தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி.முருகன் மாநாடு துவக்க விழாவில், முதல்வர் பேசுகிற போது, இனம், மொழி, ஜாதி பாகுபாடு இல்லை என்றார். பாகுபாடு இல்லை என்றால், கிருஷ்ணர் ஜெயந்திக்கு முதல்வர் வாழ்த்து கூற வேண்டும். இதை தமிழகம் எதிர்பார்க்கிறது. மோடி உலக அமைதிக்காக போராடுகிறார். அவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும். தி.மு.க., ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு எதிராக உள்ளது. தமிழகத்தில், 2026ல் பா.ஜ., தலைமையில் ஆட்சி அமையும். அப்போது, சட்டசபையிலும் செங்கோல் நிறுவப்படும். பிரதமர் அதை நிறுவுவார். தி.மு.க.,விடம் இருந்து தமிழகத்திற்கு விடுதலை கிடைக்க அனைவரும் உழைக்க வேண்டும்.தமிழகத்தில், 2026ல் சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, கைகள் உயர்கிறதோ இல்லையோ, இலைகள் துளிர்க்கிறதோ இல்லையோ, தாமரை மலர்ந்தே தீரும். தமிழகத்தில் பா.ஜ.,வை அரியணை ஏற்றாமல் இந்த உயிர் போகாது. இவ்வாறு அவர் பேசினார்.

எனக்கு பதவி தேவை

முன்னாள் எம்.எல்.ஏ., விஜயதரணி பேசியதாவது:மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வானேன். இரண்டரை ஆண்டுகள் பதவி இருக்கும் நிலையில், அதை விட்டு பா.ஜ.,வுக்கு வந்தேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை; எதிர்பார்ப்புடன் தான் வந்துள்ளேன். நன்றாக உழைக்க வேண்டும். கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு வந்தேன். அதற்கு ஒரு பதவி தேவை. ஆறு மாதங்களாகி விட்டது. பிரச்னை இல்லை. நீங்கள் இருக்கிறீர்கள். அனைவரும் பேசி எனக்கு நல்லது செய்வீர்கள். என்னை போன்றவர்களின் பணியை, பா.ஜ., பயன்படுத்தும். வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஓட்டு சீட்டுகளாக மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

உறுதிமொழி ஏற்பு

கூட்டத்தில், 'தமிழகத்தை மீட்போம்; தளராது உழைப்போம்' என, அனைவரும் கைகளை உயர்த்தி, உறுதிமொழி ஏற்றனர். மேடையின் முன்புறம், '2026 சட்டசபை எங்கள் சபை' என குறிப்பிடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sampath Kumar
ஆக 26, 2024 09:46

அக்கா ஜி நீங்களுமா ? முருகனுக்கு விழா ஏடுத்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தாரே அதற்கு உங்ககிட்ட இருந்தும் ஒரு வாழ்த்து இல்லையாயின் ? உங்க சிலரை காட்சிகள் அதாங்க சந்து முன்னணி காருங்க கோடா வாய் திறக்கவில்லை வடக்கன் சாமியின் கிரஷனுக்கு வக்காலத்து வாங்கும் திருசெந்தூரன் ஊரில் வாழும் தநீக்கல் எல்லாம் இப்படி பேசுவது அந்த முருகனுக்கு அடுக்காது அக்கா சுத்த சாங்கிய மாறிட்டேன்ங்க போல போங்க


angbu ganesh
ஆக 26, 2024 09:36

கண்டவங்களும் சொல்ல தேவ இல்ல எங்களுக்கு இவனுங்க எல்லாம் சொல்லரா வாழத்துக்கள் தேவ இல்ல


சமீபத்திய செய்தி