உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரும் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

வரும் 27ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா பயணம்

சென்னை:''முதல்வர் ஸ்டாலின், அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்லஉள்ளார்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், தமிழகம் இதுவரை காணாத வளர்ச்சியை கண்டு வருகிறது. அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி வேகத்துடன் செயல்பட்டு, மிகப்பெரிய தொழில் வளர்ச்சியை தமிழகத்தில்ஏற்படுத்துவது எங்கள் கடமை.தொழில் துறை மீது, முதல்வர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வரும் 27ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். முக்கிய நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்க உள்ளார். பல புரிந்துணர்வுஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார். வரும் 27ல் அமெரிக்காசெல்லும் முதல்வர், செப்., 22ல் சென்னை திரும்புவார் என,தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை