உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

மீனவர்கள் கைது விவகாரம்; மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 22ம் தேதி ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களையும், அவர்களது 5 மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இந்த ஆண்டில் மட்டும் 119 மீனவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 16 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.நீண்ட காலமான நிலுவையில் இருக்கும் இந்தப் பிரச்னைக்குக்கு நிரந்தர தீர்வு காண கூட்டு பணிக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

seshadri
பிப் 24, 2025 02:07

இதற்கு நிரந்தர தீர்வு இரண்டு மட்டுமே. ஒன்று உனது அப்பன் கொடுத்த கச்ச தீவை திரும்ப பெற வேண்டும் அல்லது நமது மீனவர்கள் எல்லை தண்டி போகாமல் இருக்க வேண்டும். இது இரண்டும் நடக்குமா என்று தெரிய வில்லை


Ramesh Sargam
பிப் 23, 2025 21:12

சாலை வசதி இல்லை: சடலத்தை 3 கி.மீ., சுமந்து சென்ற கிராம மக்கள். மொதல்ல இந்த அவலத்துக்கு பதில் சொல்லுங்க. மீனவர்கள் பிரச்சினை என்றும் இருக்கிறது. அதை அப்புறம் கூட பார்த்துக்கலாம், அல்லது மீன்வளத்துறை அமைச்சர் அதை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தலாம், அவரே கூட கடிதம் எழுதலாம். மொதல்ல மேற்கூறிய அவலத்தை சரிசெய்யப்பாருங்க.