உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வரின் தாயார் தயாளு அட்மிட்

முதல்வரின் தாயார் தயாளு அட்மிட்

சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலினின் தாயாரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியுமானவர் தயாளு, 92. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vl7bbsx5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வயது முதிர்வால், சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவ்வபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு, வீட்டில் இருந்த தயாளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே குடும்பத்தினர், சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.முதல்வர் ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் நேரில் சென்று, மருத்துவர்களிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை