உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலம் இன்று ஈரோட்டில் நாளை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

சேலம் இன்று ஈரோட்டில் நாளை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

சேலம்,:தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சேலத்திலும், நாளை ஈரோட்டிலும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முதல்வர் ஸ்டாலின், கடந்த 22ல், லோக்சபா தேர்தல் பிரசாரத்தை, திருச்சியில் தொடங்கினார். தொடர்ந்து பெரம்பலுார், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி என அடுத்தடுத்து, 9 மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று தர்மபுரி பிரசாரத்தை முடித்து இரவு சேலம் வந்தார்.இன்று மாலை, 6:00 மணிக்கு, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், வேட்பாளர்கள் செல்வகணபதி, மலையரசனுக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.* ஈரோடு தொகுதி தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், நாமக்கல் வேட்பாளர் மாதேஸ்வரன், கரூர் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து, ஈரோடு அடுத்த சின்னியம்பாளையத்தில் நாளை மாலை, 5:00 மணிக்கு பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார். கூட்டத்துக்கு பின், இரவு கோவை செல்கிறார். அங்கிருந்து தனி விமானத்தில் சென்னை செல்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை