உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அனைத்து எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். வரும் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் மக்களுடன் முதல்வர் திட்டம், காலை உணவு திட்டம் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி மக்களுடன் முதல்வர் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேற்கண்ட இந்நிகழ்ச்சிகளில் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் எம்.பிக்களும் பங்கு பெற வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 05, 2024 06:09

கமிஷன் கரெக்டா வந்துடனும் என்று அர்த்தம்.


PRSwamy
ஜூலை 05, 2024 03:20

எப்படி எழுதுவார்? என் உயிரிலும் மேலான கொத்தடிமைகளே


Anantharaman Srinivasan
ஜூலை 04, 2024 23:14

சில லட்சங்கள் செலவழித்து அழைப்பிதழ் போடலையா.? ஆச்சரியம் தான்.


ديفيد رافائيل
ஜூலை 04, 2024 21:50

சட்டசபையில பேசினாலே போதுமே


ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 21:48

உங்க சுய விளம்பரத்துக்காக மற்றவர்கள் வரணுமா?


ram
ஜூலை 04, 2024 21:15

கடிதம் எழுதிட்டாலும்... எழுதவெல்லாம் தெரியுமா எங்க முதல்வருக்கு... அப்படியே கட்டுப்பாடா.. கிழிச்ச கோட்டை தாண்டமாட்டாங்க.. அப்படியே வளர்ச்சி திட்டம் கிளுக்கிளுன்னு நடந்திடும்..


Yes
ஜூலை 04, 2024 20:43

சட்டசபையில் ஒருங்கே அமர்ந்திருப்பவர்களிடம் நேரில் பேசினால் ஆக்கபூர்வமான வேலைகளுக்கான நேரம் வீணாகாதே.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ