உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிமுக., - திமுக இடையே தான் போட்டி: இ.பி.எஸ்., பேச்சு

அதிமுக., - திமுக இடையே தான் போட்டி: இ.பி.எஸ்., பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார். ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளர் ஜெய பெருமாளை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் இ.பி.எஸ்., பேசியதாவது: நாட்டு மக்கள் தான் அதிமுக.,வுக்கு எஜமானர்கள். எம்.ஜி.ஆர் மக்களுக்காக கட்சி நடத்தினார். குடும்பத்துக்காக நடத்தப்பட்ட கட்சி திமுக. தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மக்கள் யோசித்து பார்க்க வேண்டும்.

நான் விவசாயி

விவசாயிகளின் கஷ்டத்தை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். நான் ஒரு விவசாயி. அதிமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் துன்பங்கள் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக கொண்டு வந்தது. எதில் எல்லாம் அதிக லாபம் வருமோ அந்த திட்டத்தை கொண்டு வந்து தங்களது கஜானாவை திமுக.,வினர் நிரப்பி கொள்கின்றனர்.

திமுக.,வுக்கு பாடம் புகட்டுங்கள்

காவிரி குண்டாறு திட்டத்தை திமுக அரசு ஏன் முடக்கியது என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும். திமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும். கச்சத்தீவு உரிமை பறிபோனதால், மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவ மக்களின் துன்பத்தை அகற்ற, கச்சத்தீவை மீண்டும் இந்தியா உடன் இணைக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக கண்டு கொள்ளவில்லை.

கச்சத்தீவு பிரச்னை

தேர்தலுக்காக கச்சத்தீவு பிரச்னையை பா.ஜ.,வினர் எழுப்புகின்றனர். பார்லிமென்டில் அனுமதி பெறாமல் கச்சத்தீவை தாரை வார்த்தது தவறு என உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். ஆட்சியில் இருக்கும் போது மீனவர்கள் கைது செய்யப்படும் போதெல்லாம் அவர்களை விடுவிக்க அதிமுக நடவடிக்கை எடுத்தது. இதுவரை எந்த கட்சியும் மீனவர்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை 3 தொகுதிகளில் வேட்பாளராக நிறுத்தியது இல்லை. அதிமுக தான் நிறுத்தியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

spr
ஏப் 09, 2024 17:57

தமிழகம் மட்டுமல்ல அனைத்து இந்தியாவிலும் எதிர்க்கட்சிகள் எதனால் இத்தனை மூடத்தனமாக நடந்து கொள்கின்றன? அப்படியானால் எங்களில் யாருக்கு வேண்டுமானாலும் எங்கள் வேட்பாளர் தகுதியைப் பொறுத்து வாக்களியுங்கள் இந்த நாட்டில் இரு கட்சி ஆட்சி வருகிறதோ அன்றுதான் சிறப்பான எதிர்க்கட்சி அமையும்


sureshpramanathan
ஏப் 09, 2024 11:24

Useless EPS First accepting DMK who are thieves even as a party is unacceptable EPS recognise DMK but not National party BJP Idiots who are all corrupt groups


பேசும் தமிழன்
ஏப் 09, 2024 08:56

பங்காளிகளுக்குள் எப்படி போட்டி இருக்கும்.... நாங்கள் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக இருக்கிறோம் என்று கூறினால் நம்பலாம்...... அது தான் உண்மையும் கூட !!!


தேவதாஸ் புனே
ஏப் 09, 2024 06:24

போட்டி இல்லை.....டீல்.... ஒப்பந்தம்..... agreement......


Mani . V
ஏப் 09, 2024 06:12

எதில் கொள்ளையடிப்பதிலும், ஊழல் செய்வதிலுமா?


Kasimani Baskaran
ஏப் 09, 2024 05:23

"திமுக" என்ற பிராண்டை பங்கு போடும் இவர்களுக்கிடையில் உறவு இல்லை என்பவர்கள் இப்பொழுதாவது உன்னை நான் தாக்க மாட்டேன் - நீயும் எங்களை தாக்கக்கூடாது என்ற ஒபந்தத்தை புரிந்து கொண்டு இருப்பார்கள் என்று நம்புவோமாக


Jayaraman Pichumani
ஏப் 09, 2024 01:27

திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான் போட்டி இபிஎஸ் குறுக்கே மறுக்கே ஓடி சுண்டல் விற்கிறார்


RV Ramesh Viralipatti
ஏப் 08, 2024 23:17

அதுதான் தெரியுமே நீங்க ரெண்டு பேரும் பங்காளிகள் என்று (ஒரு குட்டையில் ஊர்ன மட்டைகள்)


S.Ganesan
ஏப் 08, 2024 20:35

எடப்பாடி சொல்வது சரிதான் யார் பல்லை காட்டினார்கள் , யார் காலில் விழுந்தார்கள் என்று ஒருவர் மீது மற்றொருவர் குற்றம் சொல்வதில் திமுகவுக்கும் , அதிமுகவுக்கும்தான் போட்டி


DURAI MURUGAN NAGALINGAM
ஏப் 08, 2024 20:22

அதிமுக அழிவு பாதையில் பயணித்து கொன்டு இருப்பதை எடப்பாடி க்கு தெரியவில்லை


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ