முதல்வர் இரங்கல்
இறக்கும் தருவாயிலும், இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த, டிரைவர் மலையப்பனுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.முதல்வர், தன் சமூக வலைதளப் பக்கத்தில்,'இறக்கும் தருவாயிலும், இளம் பிஞ்சுகளின் உயிர்காத்த மலையப்பன் மறைவுக்கு, ஆழ்ந்த இரங்கல். அவரது மனிதநேயமிக்க செயலால், புகழுருவில் அவர் வாழ்வார்' என தெரிவித்துள்ளார்.