உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுன்டிங் சென்டர் கேமரா ரிப்பேர்: ஆய்வு பணியில் அதிகாரிகள் குழு

கவுன்டிங் சென்டர் கேமரா ரிப்பேர்: ஆய்வு பணியில் அதிகாரிகள் குழு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : ஓட்டு எண்ணும் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை, அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, அவை பழுதின்றி செயல்பட, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தமிழகத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுகள், 39 மையங்களில் எண்ணப்பட உள்ளன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீலிடப்பட்டு, அறைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீலிடப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டடத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் அலுவலர்கள், 24 மணி நேரமும் பாதுகாப்பில் உள்ளனர். அறை உள்ளேயும், வெளியிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது.இந்நிலையில், நீலகிரி, ஈரோடு, தென்காசி, விழுப்புரம் என, அடுத்தடுத்து மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ள கட்டடத்தில், கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்தது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததற்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு வழங்கியதில் ஏற்பட்ட குளறுபடியும் காரணம் என்று கூறப்படுகிறது.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: ஒரு சில பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பழுதடைந்ததாக புகார் எழுந்துள்ளது. இதற்கு சில தொழில்நுட்ப பிரச்னை காரணம் என்று கூறப்படுகிறது.இப்புகார் வந்ததும், அனைத்து மாவட்டங்களிலும், மின் துறை, பொதுப்பணி துறையின் எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து, கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிறதா என, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஆய்வு முடிவில், கண்காணிப்பு கேமராக்கள் பழுதின்றி செயல்பட, தேவையான நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒயர்கள் பழுதடைந்திருந்தால், அதை மாற்ற வேண்டும். கூடுதலாக ஜெனரேட்டர், யு.பி.எஸ்., தேவைப்பட்டால், அதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என, மாவட்ட கலெக்டர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

sridhar
மே 07, 2024 13:08

Retire ஆகும் வரை இந்த திமுக வட்ட செயலாளர் தான் தமிழக தேர்தல் அதிகாரியா என்ன அநியாயம்


J.V. Iyer
மே 07, 2024 12:52

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்யும் செயல்கள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளன அவரை எப்படி நம்புவது அவரை சீக்கிரம் இடம் மாற்றுங்கள் எசமானர்களே


M Ramachandran
மே 07, 2024 10:15

இந்த தேர்தல் அதிகாரி அவருடைய வாழ்வில் இந்த தேர்தல் ஒரு கரும் புள்ளி


GoK
மே 07, 2024 09:11

இந்த ஆளை வேலையிலுருந்து இன்னும் தூக்காம தேர்தல் ஆணையம் என்ன செய்யுது தூங்குதா? நல்லா வந்து வாய்ச்சாம்பா தமிழ்நாட்டுக்குஎந்த பக்கமும் விடியலே வராது போல


RAAJ68
மே 07, 2024 08:22

காங்கிரஸ் ஆண்ட காலங்களில் கேமரா எல்லாம் கிடையாது. அப்போது நன்பகத்தன்மை இல்லையா.


Anbuselvan
மே 07, 2024 08:05

இம்முறை இவ்வுளவு கேவலமாக தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் நடத்திய விதம் ஆகியவைகளை மனதில் கொண்டு இவர் என்ன செய்து இருக்க வேண்டும்? அதேதான் செய்தாரா? இல்லையே ஏன்? அதேதான்


VENKATASUBRAMANIAN
மே 07, 2024 07:34

இந்த தேர்தல் அதிகாரி திமுகவின் மாவட்ட செயலாளர் போல் நடந்து கொள்கிறார் இவரை ஏன் மாற்றவில்லை


karupanasamy
மே 07, 2024 07:06

இவன் திராவிட மாடல் அல்லக்கை வேஸ்ட் ப்ராடக்ட்


Kasimani Baskaran
மே 07, 2024 06:33

ஒரே நேரத்தில் எல்லாம் ரிப்பேர் என்பதைப்போல காமடி வேறு ஒன்றும் இருக்க முடியாது ஒன்று மின்சாரத்தடை ஏற்பட்டு, UPS கள் பழுதாகி அதனால் காமிராக்களை கட்டுப்படுத்தும் கணணிகள் தொடர்பு கொள்ள முடியாத வகையில் இருக்கலாம் அல்லது காமிராக்களை இணைக்கும் பிரதான Switch / Routers பழுதாகியிருக்கலாம் குறைந்த பட்சம் ஒரே ஒரு காமிராவாவது பாட்டரியில் இயங்கும் ரெக்கார்டர்களை வைத்து கனெக்ட் செய்திருக்க வேண்டும்


D.Ambujavalli
மே 07, 2024 06:22

ஊருக்கு முன்னால் தேர்தலை முடித்துவிட்டு நாற்பது நாளுக்கு மேல் யந்திரங்களைக் கட்டிக்காத்து காபந்து செய்வதற்கு ஆகும் செலவில் ஒரு மாநிலம் முழுவதற்குமே மின்சாரம் வழங்கியும் , சம்பளம் படிகள் வகையில் தண்டச்செலவும் எல்லாம் நம் தலையில் தான் விழுகிறது ஒரு தேர்தலை இரண்டு மாதம் நடத்தும் அவசியம்தான் என்னவோ ?


sridhar
மே 07, 2024 13:10

இதற்கு முன்பும் பல முறை அப்படி தான் நடந்திருக்கிறது பல கட்ட தேர்தல் என்றால் அப்படி தான் காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படி தான் இருந்தது


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை